விருகம்பாக்கத்தில் நாட்டுவெடிகுண்டு வீச்சு!!

Photo of author

By Savitha

விருகம்பாக்கத்தில் நாட்டுவெடிகுண்டு வீச்சு!!

நேற்று நள்ளிரவு விருகம்பாக்கம் காமராஜர் தெரு பெரியார் நகர் பகுதியில் உள்ள இருசக்கர வாகன பஞ்சர் கடை முன்பாக மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனர்.

பயங்கர சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். நாட்டு வெடிகுண்டு வீசியதில் யாருக்கும் எத்தகைய தீங்கும் ஏற்படவில்லை. பஞ்சர் கடையில் இருந்த டியூப் லைட் மற்றும் இதர பொருட்கள் சேதம்.

மர்ம நபர்கள் யார்? யார் மீது வீசுவதற்காக அவர்கள் வந்தனர் என்பது குறித்து விருகம்பாக்கம் போலீசார் சிசிடிவி காட்சிகள் கொண்டு தீவிர விசாரணை.