கோடிக்கணக்கில் மோசடி செய்த செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் கொடுத்த ஷாக்!!

0
193

போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நீதிமன்றம் விடுவிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

2011 – 2015 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது (தற்போது அவர் திமுகவில் உள்ளார்), அவரது பெயரைச் சொல்லி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பெரும் மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

4 கோடியே 32 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக கணேஷ்குமார், தேவசகாயம், அருண் குமார் உள்ளிட்டோர் அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தற்போது திமுகவில் உள்ள செந்தில் பாலாஜி, பிரபு, சகாயராஜன் மற்றும் அன்னராஜ் அவர் மீது நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல், பதவியை வைத்து ஏமாற்றுதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இது தொடர்பான புகார் வழக்கினை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்திடம், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கும்படி செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து வழக்கினை ஆய்வு செய்த சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் அவரது மனுவை தள்ளுபடி செய்ததுடன், நீதிமன்ற வழக்கிலிருந்து விடுவிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

Previous articleதமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாஜக துணையின்றி எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது:!ஹெச்.ராஜா அதிரடி பேட்டி!
Next articleஜம்மு-காஷ்மீர் இளைஞர்களை பற்றி பேசிய ரெயினா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here