நீதிமன்றம் என்பது தொலைக்காட்சி அல்ல விளம்பரம் செய்ய! மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள்!

Photo of author

By Parthipan K

நீதிமன்றம் என்பது தொலைக்காட்சி அல்ல விளம்பரம் செய்ய! மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள்!

மத்திய பிரேதேசத்தை சேர்ந்த ஜன் விகாஸ் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில் தேர்தல்களின்போது பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆணையத்துக்கு பதிலாக வேறு சில நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் 324ஆவது பிரிவின்கீழ் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வாக்குபதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்ட வேண்டும்எனவும் கூறப்பட்டிருந்தது.

அதனையடுத்து தேர்தல் எந்தவொரு முறைகேடுமீன்றி நியாயமான தேர்தல் முறையில் உள்ளதா என்பதையும் உறுதி செய்யவேண்டும்.இந்த மனுவானது நீதிபதிகள் எஸ்.கே.கௌல் மற்றும் ஏ.எஸ்.ஓகா ஆகியோர் அமர்வு முன்பு நேற்று  விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதிகள் பொது தேர்தலின் போது நாடு முழுவதும் எத்தனை பேர் வாக்களிக்கின்றனர் என்பதன் விவரம் உங்களுக்கு தெரியுமா என மனுதாரரிடம் கேள்வி எழுப்பினார்கள்.

மேலும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 இன்கீழ் தேர்தல் நடைமுறையை தேர்தல் ஆணையம் கண்காணிக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகின்றது.சமந்தப்பட்ட கட்சிக்கு தேர்தலின்போது வாக்காளர்களிடமிருந்து போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.அதனால் தான் இதுபோன்ற மனுக்கள் தொடரப்பட்டு கட்சியை விளம்பரம் படுத்தி வருகின்றனர் என கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.