jharkhand: தனது பழைய நண்பர்கள் தன்னை பண மோசடி செய்ததாக தோனி தொடர்ந்த வழக்கில் நேரில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
இவர் தற்போது அனைத்து சர்வதேச போட்டிகளிலும் ஓய்வு அறிவித்து விட்டார். ஆனால் இன்னும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சமீபத்தில் csk தக்க வைக்கப்பட்ட வீரர்களில் எம் எஸ் தோனி ரூ.4 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார்.
இந்நிலையில் எம் எஸ் தோனி தன்னுடைய பழைய நண்பர்கள் உடன் ஏற்பட்ட பண மோசடி வழக்கில் நேரடியாக ஆஜராகி விளக்கமளிக்கும் படி ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தன் பெயரை பயன்படுத்தி தனது பழைய நண்பர்களான திவாகர் மற்றும் சௌமியா தாஸ் இருவரும் ரூ.15 கோடி ஏமாற்றியதாக குற்றம்சாட்டியுள்ளார். இதை எதிர்த்து அந்த இருவரும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதற்கு தோனி நேரில் ஆஜராகி தனது பதிலை அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.