வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த பெண்மணி கையும் களவுமாக சிக்கினார்! போலீசார் அதிரடி கைது..!!

0
141

வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த பெண்மணி கையும் களவுமாக சிக்கினார்! போலீசார் அதிரடி கைது..!!

கோயம்புத்தூர் மாவட்டம் ரத்தினபுரி கண்ணப்பன் நகர் அருகே அருள்நகர் பகுதியில் வசிக்கும் முபீனா என்கிற இஸ்லாமிய பெண்மணி வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்த காரணத்தால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கணவர் அன்வர் பாஷாவுடன் வசித்து வந்த முபீனா கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரை பிரிந்த கணவர் அன்வர் பாஷா மற்றொரு திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. தனியாக வசித்து வந்த முபீனா, பெரியா கஞ்சா வியாபாரிகளிடம் இருந்து மொத்தமாக வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து சிறு கஞ்சா வியாபாரிகளுக்கு ரகசியமாக விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், இவரது கஞ்சா விற்பனை பற்றிய ரகசிய தகவல் ரத்தினபுரி இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணிக்கு கொடுக்கப்பட்டது. ரகசிய தகவலின் அடிப்படையில் முபீனாவின் வீட்டை போலீசார் சரியான நேரத்தில் சுற்றி வளைத்தனர். பின்னர் அவரது வீட்டில் நடத்திய சோதனையில் 8 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கிய முபீனாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கஞ்சா விற்பனை செய்த விவகாரம் அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous article‘பாரத் மாதாகீ ஜெய்’ கோஷம் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் – மன்மோகன் சிங்!
Next articleவன்முறையையும் அரசியல் கொலையையும் நிறுத்துங்கள் அரசுக்கு ஆளுநர் அறிவுரை