குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை.. ஆய்வு முடிவால் அதிர்ச்சியடைந்த மக்கள்!!

Photo of author

By Vijay

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை.. ஆய்வு முடிவால் அதிர்ச்சியடைந்த மக்கள்!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம், சங்கம்விடுதி ஊராட்சியிலுள்ள குருவாண்டான் தெருவில் மக்களின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தி வரும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மர்ம நபர்கள் சிலர் மாட்டுச்சாணத்தை கலந்ததாக அப்பகுதி மக்கள் புகார் கூறினார்கள்.

மேலும் அந்த குடிநீரை குடித்த சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்ட நிலையில் தான் குடிநீர் தொட்டியை திறந்து பார்த்த மக்கள் மாட்டுச்சாணம் கலந்திருப்பதாக கூறி கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த அதிகாரிகள் அந்த தொட்டியில் இருந்து அன்றைய தினம் பெறப்பட்ட குடிநீர் மாதிரியை திருச்சி பொது சுகாதார நீர் பகுப்பாய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் அந்த பரிசோதனையின் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில் குடிநீர் மாதிரியானது குடிப்பதற்கு உகந்தது என்றும், நோய்க் கிருமி எதுவும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் பொதுவாக இதுபோன்ற குடிநீரில் ஏதேனும் கலப்பு ஏற்பட்டால் அந்த நீரில் ஈகோலி (ECOLIA) என்ற பாக்டீரியா பல்கிப்பெருகிவிடும்.
அந்த சமயத்தில் அந்த நீரை குடிப்பதால் ஈகோலி பாக்டீரியா காரணமாக நம் உடல் பாதிக்கப்படும். ஆனால் சங்கம்விடுதி குருவாண்டான் தெருவிலுள்ள குடிநீர் தொட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட நீரில் அதுபோன்ற பாக்டீரியாக்கள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் கூட குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த விவகாரம் தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த இருதரப்பு மக்கள் ஒன்றாக இணைந்து போராட்டம் நடத்தினார்கள். மேலும் தங்களுக்கு ஒரு நபர் மீது சந்தேகம் இருப்பதாகவும், இருபிரிவை சேர்ந்த மக்கள் ஒன்றாக இருப்பதால், ஒற்றுமையை சீர்குலைக்க இதுபோன்று செய்திருக்கலாம் எனவும் அப்பகுதி மக்கள் கூறினார்கள். இந்நிலையில் ஆய்வு முடிவில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை என்று வந்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.