எடப்பாடி தான் பெஸ்ட் ஸ்டாலின் வேஸ்ட்! கருத்துக் கணிப்பால் வேதனை அடைந்த திமுக

Photo of author

By Sakthi

திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சமயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்ட குழு தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை இன்று காலை திமுக சார்பாக அமைக்கப்பட்டு இருந்த பேச்சுவார்த்தை குழுவுடன் நடத்தியிருக்கிறது. இது இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை என்று தெரிவித்திருக்கிறார்.

திமுக சார்பாக ஒரு குறிப்பிட்ட தொகுதிகளின் எண்ணிக்கையை தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் தெரிவித்த தொகுதி எண்ணிக்கை எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று திமுக தலைமையிடம் தெரிவித்தோம். இன்றைய தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. அந்த செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டு அதன் பிறகு இறுதி முடிவு என்ன என்பதை இன்று மாலை தெரிவிப்போம் என்று தெரிவித்திருக்கிறார்.

திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கூட்டணி கட்சிகள் அனைத்திற்கும் தொகுதிப் பங்கீடு என்று வந்தாலே திமுக படு டென்ஷனாகி விடுவதாக சொல்கிறார்கள் ஏனென்றால் எல்லோரும் ஒரு கணிசமான அளவில் தொகுதிகளை பெறுவதற்கு முயற்சி செய்கிறார்கள் ஆனால் திமுகவோ அவர்களின் பலத்தை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் தொகுதிகளை பங்கிட வேண்டும் என்று நினைக்கிறது.

ஆகவே கூட்டணிக் கட்சிகள் தொகுதி பங்கீடு என்பதில் பெரிய அளவில் எதிர்பார்த்தாலும் திமுக அதனை நிறைவேற்றுவதற்கு தயக்கம் காட்டி வருகிறது. அதன் காரணமாக பல கூட்டணி கட்சிகள் திமுக கூட்டணியில் அதிருப்தியில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.போதாக்குறைக்கு பிரசாந்த் கிஷோர் ஒருபுறம் திமுக 200 தொகுதிகளுக்கு மிகாமல் களம் காண வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அதனை மனதில் வைத்து தான் திமுக தலைமை கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்வதில் காட்டிவருகிறது என்று கூட்டணி கட்சிகளை சார்ந்த தலைவர்கள் கடும் கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் அதிமுகவில் இதுபோன்ற எந்த ஒரு சிக்கலும் இல்லை என்று தெரியவருகிறது. ஆரம்பத்தில் சிறு சிறு சிக்கல்கள் இருந்தாலும் அந்த கூட்டணியில் அனைத்தும் பேசி சரி செய்யப்பட்டு ஒரு சுமுகமான முடிவை எடுத்துவிடுகிறார்கள்.இதற்கெல்லாம் சூத்திரதாரியாக இருப்பவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்று சொல்கிறார்கள். எதிராளி எவ்வளவு மனதனத்துடன் வந்தாலும் அவர்களை எவ்வாறு பேசி சரி கட்ட வேண்டுமோ அவ்வாறு பேசி சரி செய்துவிட்டு தான் நினைத்த காரியத்தை சாதித்து கொள்கின்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்று தெரிவிக்கிறார்கள்.

ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு அந்த சாதுரியம் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை அவர் இறங்கி வந்தாலும் பிரசாந்த் கிஷோர் இதுபோன்ற கட்சியின் உள்விவகாரங்களில் தலையிட்டு அனேக இடங்களில் அவருடைய ஆதிக்கத்தை திமுகவில் நிலைநிறுத்த முயற்சி செய்கிறார் என்றும் ஒரு ஆதங்கம் இருந்து வருகின்றது.இதெல்லாம் தெரிந்து கொண்ட தமிழக மக்கள் முடிவெடுக்க முடியாத ஸ்டாலினை விட சரியோ தவறோ தாம் நினைப்பதை அப்படியே செய்து முடிக்கும் எடப்பாடி தான் பெஸ்ட் என்று முடிவெடுத்திருப்பதாக ஒரு கருத்துக்கணிப்பு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.