விரைவில் சசிகலாவை நோக்கி அதிமுக வரும்! அமமுகவின் முக்கிய நிர்வாகி!

0
204

கடந்த 2017 ஆம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சுதாகரன், இளவரசி, சசிகலா, ஆகியோர் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்கள்.இந்த நிலையில், சசிகலா நன்னடத்தை காரணமாக தண்டனைக் காலம் முடிவதற்கு முன்னரே விடுதலை செய்யப்படலாம் என்ற கருத்து பரவலாக தெரிவிக்கப்பட்டு வந்தது. ஆனால் இதனை கர்நாடக சிறைத்துறை திட்டவட்டமாக மறுத்தது.அதிலும் பரப்பன அக்ரஹாரா சிறையில் கண்காணிப்பாளராக இருந்த ரூபா அவர்கள் சசிகலா விஷயத்தில் ஆரம்பம் முதலே கெடுபிடி ஆகவே இருந்து வந்தார்.

இந்த நிலையில் பெங்களூரு சிறையில் கண்காணிப்பாளராக இருந்த ரூபா அவர்கள் கர்நாடக மாநிலத்தின் உள்துறை செயலாளராக பதவி ஏற்றார். அவர் உள்துறை செயலாளராக பதவி ஏற்றதில் இருந்து சசிகலா விடுதலையில் சிக்கல் ஏற்பட தொடங்கியது.இதனால் சசிகலா சற்று மனம் உடைந்து போனார்.ஆனால் கடந்த டிசம்பர் மாதம் வாக்கில் கர்நாடக மாநில உள்துறை செயலாளர் பதவியில் இருந்து ரூபா மாற்றப்பட்டார். அதன் பிறகு சசிகலா நிம்மதி ஆனார்.இதில் வேடிக்கை என்னவென்றால் கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆளும் கட்சியாக இருந்து வருகிறது ஆகவே பாஜகவுடன் சசிகலா இணக்கமாக இருக்கிறார் என்ற கருத்தும் நிலவி வந்தது.

இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலை ஆனார் சசிகலா அவர் விடுதலை ஆவதற்கு சுமார் ஒரு வார காலத்திற்கு முன்பாகவே அவருக்கு கொரோனா ஏற்பட்டதன் காரணமாக, சுமார் ஒரு வாரகாலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி அவர் சென்னைக்கு திரும்பினார் அவர் சென்னைக்கு வந்ததில் இருந்து எந்தவித அரசியல் நடவடிக்கைகளிலும் இறங்காமல் அமைதியாகவே இருந்து வந்தார்.இந்த நிலையில் திடீரென்று அவர் தான் அரசியலில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார். இதனால் டிடிவி தினகரன் முதல் அவருடைய ஆதரவாளர்கள் வரை அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.

இதனைத் தொடர்ந்து அவர் தனது சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சென்று அங்கே தன்னுடைய குடும்பத்தினருடன் கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்து வந்தார். இதனை அடுத்து தமிழகத்தில் இருக்கின்ற பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அவர் சாமி தரிசனம் செய்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது. நேற்றைய தினம் ராமேஸ்வரம் சென்று ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ததாக சொல்லப்படுகிறது.

இந்தநிலையில் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் பூவநாத சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்திருக்கிறார். அந்த சமயத்தில் சசிகலா மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செய்தி தொடர்பாளர் சி ஆர் சரஸ்வதி ஆகியோர் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து அவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார் அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது மிக விரைவில் சசிகலாவை நோக்கி அதிமுக வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அது காலத்தின் கட்டாயம் என்று தெரிவித்திருக்கிறார்.

எல்லோரும் சேர்ந்து திமுகவை எதிர்கொள்ள வேண்டும் இதுதான் சசிகலாவின் ஆசையாக இருந்து வருகிறது. மனிதன் என்றால் நன்றியுடன் இருக்க வேண்டும் ஆனால் நன்றி மறந்த எடப்பாடி பழனிச்சாமி இன்று துரோகத்தின் உச்சிக்கே போய்விட்டார். அதற்கான பதிலை தமிழக மக்கள் தெரிவிப்பார்கள் அமைச்சர் கடம்பூர் ராஜு தான் டிடிவி தினகரன் கோவில்பட்டியில் நிற்க வேண்டும் என்று ஒரு காலத்தில் தெரிவித்தார் ஆகவே டிடிவி தினகரன் அங்கே போட்டியிட இருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார் சிஆர் சரஸ்வதி.

Previous articleஎன்ன தேங்காய் ஓட்டில் டீ-யா..? – சர்க்கரை நோயாளிகளே கவனியுங்கள்
Next articleவாக்களிக்க அடையாள அட்டை இல்லையா..? கவலை வேண்டாம் – தீர்வு இதோ