உலகையே திரும்பி பார்க்க வைக்கும் அசத்தல் கன்டுபிடிப்பு!! நீரில் போட்டால் கரையும் பிளாஸ்டிக்!!

0
16
Crazy invention that makes the world look back!! Plastic that dissolves in water!!
Crazy invention that makes the world look back!! Plastic that dissolves in water!!

Japan: புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வருவதில் ஜப்பானியர் பேர் போனவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்த வகையில் தற்போது கடல் நீரில் கரையும் பிளாஸ்டிக்கை கண்டுபிடித்துள்ளனர். நாம் உபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் சீர்கேடு அடைவதுடன், கடல் வாழ் உயிரினங்கள் என அனைத்திற்கும் சிரமத்தை தான் ஏற்படுத்துகிறோம். அதுமட்டுமின்றி நம் பின்னணி சந்ததியினருக்கு சுற்றுச்சூழலை சீர்கேடு அடைந்து விடாமல் கொடுக்க வேண்டிய முழு பொறுப்பும் நம்முடையது.

ஆனால் தற்போது காற்று நீர் நிலம் என பலவற்றிலும் மாசு ஏற்பட்டுவிட்டது. தற்போது அதனை சுத்திகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். அந்த வகையில் பல ஆண்டுகளாக ஜப்பான் டோக்கியோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இது ரீதியாக சோதனை செய்து வந்துள்ளனர். அந்த சோதனையானது வெற்றியடைந்துள்ளது பாராட்டுக்கூடியது. இதனை மக்களுக்கு விளக்கு வகையில் வாகோ நகரில் உள்ள ஆய்வகத்தில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை வைத்தனர். அதில் கடல் நீரில் இவர்கள் கண்டுபிடித்த பிளாஸ்டிக் துண்டை போட்டனர்.

போட்ட ஒரு மணி நேரத்திலேயே கண்ணுக்கு தெரியாமல் கரைந்து போனது. இதில் நல்லது என்னவென்றால் இப்படி கரையும் பிளாஸ்டிகானது தனது எந்த ஒரு நச்சுக்களையும் கடலில் கலப்பதில்லை. அந்த வகையில் இது மக்களுக்கு ஏற்ற ஒன்றுதான் எனக் கூறுகின்றனர். ஆனால் இதனை எப்படி நடைமுறைக்கு கொண்டு வருவது மேற்கொண்டு இதனை தொழில் ரீதியாக எப்படி நகர்த்துவது என எந்த திட்டமும் தற்போது இல்லையாம். இது ரீதியாக அந்த ஆய்வாளர்கள் குழுவின் மூத்த நிர்வாகி ஐடா பேசுகையில், உப்பு தண்ணீர் பட்டால் கரையும் தன்மை கொண்ட இந்த பிளாஸ்டிகானது யாருக்கும் தீங்கு விளைவிப்பதில்லை.

அதேபோல இது மண்ணிலும் கரையக்கூடியது. இதன் மீது ஒருவித கோட்டிங் பூசப்படும் நிலையில் மக்கள் தினசரி உபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தையும் இதை வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த வகையில் இந்த பிளாஸ்டி-க்கு மேல் உபயோகிக்கப்படும் கோட்டிங் எந்த வகையை சார்ந்தது என்பது குறித்த ஆராய்ச்சி நடந்து வருவதாக தெரிவித்த அவர், இது மாசுபாட்டை குறைப்பதற்காக கொண்டுவரப்பட உள்ளது என்றும் தெரிவித்தார்.

Previous articleபாமக அப்பா மகன் மோதல்.. பாஜக தான் முக்கிய காரணம்- பளீச் பதிலளித்த நயினார்!!
Next articleசுற்றி பயணத்திற்கு தயராகும் தவெக தலைவர் விஜய்; அனல் பறக்கும் தேர்தல் களம்!!