மெட்ரோ ரயில் பயணிகளுக்கு வரும் அசத்தல் திட்டம்! ஒரு கார்டு மூலம் இரண்டு சேவையை பெறலாம்!
தற்போது சென்னை மெட்ரோ ரயில் சேவையானது நீல வழித்தடத்தில் விம்கோ நகர், பணிமனை முதல் விமான நிலையம் வரையிலும்,பச்சை வழித்தடத்தில் சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் இயக்கப்பட்டு வருகின்றது.
இதனை அடுத்து புதிதாக மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவையானது விரிவுபடுத்தப்படுகிறது. இந்த சேவையானது அடுத்த 2026 ஆம் ஆண்டு முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் மூலம் சிங்கிள் ஸ்மார்ட் கார்டு திட்டத்தை அறிமுகம் படுத்த முடிவு செய்துள்ளது.இந்த சிங்கிள் ஸ்மார்ட் கார்டு திட்டம் அமலுக்கு வந்தால் மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்துகளில் ஒரே கார்டை பயன்படுத்தி பயணிகள் பயணம் செய்யலாம் என கூறப்படுகிறது.
பேருந்துக்களில் பணம் கொடுப்பதற்கு பதிலாக கார்டை பயன்படுத்தி ஒரு முறை ரீ சார்ஜ் செய்து கொள்ளாலாம்.இதன் மூலம் டபுள் டிராவல் என்ற அடிப்படையில் 2 வாகனங்களை பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலும் புதிதாக அமைக்க இருக்கும் பேருந்து நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களை இணைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றது. அதன் அடிப்படையில் கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய பகுதிகளில் அமையும் புதிய பேருந்து நிலையங்கள் மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கப்பட்டுள்ளது .
அதனால் அந்த பகுதியில் இருந்து மெட்ரோ ரயில் சேவையில் வரும் பயணிகள் உடனடியாக பேருந்து சேவையை அணுக முடியும்.இருப்பினும் இதில் சில சிக்கல்கள் உள்ளது அதனால் சிறு மாற்றங்கள் கொண்டுவர நடவடிக்கைகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
மெட்ரோ ரயில் சேவையுடன் தொடர்பில் இருக்கும் 22 பேருந்து நிலையங்களில் 7 சிறிய அளவில் மாற்றங்கள் கொண்டுவரப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.