ரேஷன் கடை ஊழியர்களுக்கு வெளிவந்த அசத்தல் திட்டம்! ரூ 50,000 வரை சம்பாதிக்கலாம்!

Photo of author

By Parthipan K

ரேஷன் கடை ஊழியர்களுக்கு வெளிவந்த அசத்தல் திட்டம்! ரூ 50,000 வரை சம்பாதிக்கலாம்!

தேசிய உணவு மாநாடு நடந்தது. அப்போது அதில் மத்திய பொது விநியோக செயலர் சஞ்சீவ் சோப்ரா கலந்து கொண்டார். இவர் இந்தியாவில் உள்ள சுமார் 40,000 நியாய  விலை கடை ஊழியர்கள் மற்ற சேவைகள் வழங்குவதன் மூலம் ரூபாய் 50 ஆயிரம் வரை வருமானம் ஈட்ட முடியும் என தெரிவித்துள்ளார். இதனால் பொது விநியோகம் பொருட்கள் விட மற்ற பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அதுமட்டுமின்றி விரைவில் விற்பனையாகும் பொருட்களை நியாய விலை கடைகளில் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதி அனுப்பப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ரேஷன் கடை விநியோகஸ்தர்களுக்கு மாதம் 8000 கமிஷன் கிடைக்கும் நிலையில் இதனை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வந்துள்ளது. மேலும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு நீண்ட நாட்களாக கவுரவ ஊதியம் வழங்கப்படவில்லை. அதனால் கவுரவ ஊதியத்தை வழங்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் ரேஷன் கடை ஊழியர்கள் 50,000 வரை வருமானம் ஈட்ட முடியும் என மத்திய அரசின் பொது விநியோகம் செயலர் சஞ்சீவ் சோப்ரா கூறி இருப்பது ரேஷன் கடை ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.