மத்திய அரசு வெளியிட்ட அசத்தல் அப்டேட்! எஸ்எஸ்சி மூலம் நடத்தப்படும் தேர்வை இனி தமிழில் எழுதலாம்!
மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் குரூப் பி மற்றும் டி பிரிவு பதவிகளுக்கு அரசுப்பணியாளர் தேர்வாணையம் எஸ்எஸ்சி மூலம் நடத்தி வருகின்றனர்.மேலும் இந்த தேர்வின் வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே தாயாரிக்கப்பட்டுகின்றது.
இந்நிலையில் முதல்முறையாக எஸ்எஸ்சி நடத்தும் பல்திறன் தேர்வை தமிழ் உள்பட 13 மொழிகளில் எழுதலாம் என மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அனுமதி வழங்கியுள்ளது.மேலும் இது குறித்து மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில் வேலை தேடுவோர் அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கவேண்டும்.
மொழி காரணங்களால் ஒருவருக்கு கிடைக்கும் வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.அதனால் அதன்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு தென்னிந்தியாவைச் சேர்ந்த மாணவர்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து வரலாற்று சிறப்புமிக்க முடிவுக்கு பிறகு படிப்படையாக அரசியல் சட்டத்தின் 8 வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளும் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.