ஸ்ரீமதி மரண வழக்கில் திடீர் திருப்பம்! மாணவியின் செல்போனை வாங்க மறுத்த நீதிபதி!

0
138
A sudden twist in the death case of Smt. The judge refused to buy the student's cell phone!
A sudden twist in the death case of Smt. The judge refused to buy the student's cell phone!

ஸ்ரீமதி மரண வழக்கில் திடீர் திருப்பம்! மாணவியின் செல்போனை வாங்க மறுத்த நீதிபதி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதியில் செயல்பட்டு வந்த சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வந்த 12 ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் போராட்டமாக வெடித்தது.அந்த போராட்டத்தில் பள்ளி சூறையாடப்பட்டது.மேலும் அதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர மாணவியின்  மரணத்தில் மர்மம் உள்ளது என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.கலவர வழக்கை சிறப்பு புலனாய்வு போலீசாரும்,மாணவி மரணம் தொடர்பான வழக்கை விழுப்புரம் சிபிசிஐடி போலீசாரும் தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள்.

அதனை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் வழக்கு விசாரணைக்கு மாணவி ஸ்ரீமதி பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்க வேண்டுமென கேட்டுள்ளனர்,அதனால் கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.அந்த உத்தரவில் மாணவி பயன்படுத்திய செல்போன் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டுமென அறிவித்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை வரும் பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.அதனால் மாணவி ஸ்ரீமதியின் தாய் மாணவி பயன்படுத்திய செல்போனை  ஒப்படைக்க விழுப்புரம் நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்களுடன் வந்திருந்தார்.ஆனால் அப்போது அந்த செல்போனை நீதிபதி வாங்க மறுத்து விட்டார்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு விசாரணை அதனால் அங்குள்ள அதிகாரியிடம்தான் செல்போனை ஒப்படைக்க வேண்டும்.விழுப்புரம் கோர்ட்டில் அல்ல என கூறினார். அதனால் சம்மந்தப்பட்ட விசாரணை அதிகாரியிடம் செல்போனை ஒப்படைத்து போலீசார் பெற்றுக் கொண்டார்கள் என்பதற்கான ஒப்புகை ரசீதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.அதனைத்தொடர்ந்து ஸ்ரீமதியின் தாய் செல்வி விழுப்புரம் வண்டிமேட்டில் உள்ள சிபிசிஐடி காவல்நிலையத்தில் விசாரணை அதிகாரியிடம் அந்த செல்போனை ஒப்படைத்து சென்றார் என்பது குறிப்பிட்டத்தக்கது,

author avatar
Parthipan K