வளர்ந்து வரும் நவீன காலங்களில் கிரெடிட் கார்டின் புழக்கம் அதிகரித்து வருகின்றது. ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனம் கிரெடிட் கார்டு மூலம் பல்வேறு ஆஃபர்களை வழங்கி வருகின்றது. இதனால் இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கிரெடிட் கார்டு மூலம் நாம் பொருட்களை ஆஃபரில் பணம் செலுத்தாமல் பெற்றுக் கொள்ளலாம். அதன் பின்னர் கிரிடிட் கார்ட் பேமென்ட் செய்யும் நேரத்தில் கரெக்டாக பணம் செலுத்தி விட வேண்டும். செலுத்த தவறினால் அதிக வட்டி கணக்கில் பணம் வசூலிக்கப்படும்.
இவ்வாறு ஒரு அபாய சூழ்நிலை இருந்தாலும், தற்சமயங்களில் வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டு அதிகம் தேவைப்படுகின்றது. கடந்த நவம்பர் 2024 ஆம் ஆண்டு மட்டும் 3 1/2 லட்சம் கிரெடிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் இதைவிட நான்கு மடங்கு கிரெடிட் கார்டுகள் விநியோகப்படுத்தப்பட்டு உள்ளன. டிசம்பர் மாதம் மட்டும் 8,16,195 கிரெடிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. பெரும்பாலான கிரெடிட் கார்டுகள் ஹெச்டிஎஃப்சி மற்றும் எஸ் பி ஐ வங்கி மூலம் விநியோகப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கு காரணம் வரும் நாட்களில் தொடர்ந்து வரும் திருமண நிகழ்வுகள் மற்றும் கோடைகால விடுமுறை கொண்டாடுவதற்காக என்று ஒரு கணிப்பு உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் மட்டும் கிரெடிட் கார்டு மூலம் 19 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் கணக்கின் படி, கிரெடிட் கார்டு உபயோகப்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் 10.8 கோடியை தாண்டி உள்ளது. தற்சமயம் 11 கோடியை தாண்டி இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டு ஒரு கோடி கிரெடிட் கார்டுகள் கூடுதலாக புழக்கத்தில் வந்துள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.