மத்திய அரசு வழங்கும் கிரெடிட் கார்டு!! மானியத்துடன் வழங்கப்படும் ரூ.30,000 லிமிட்!!

Photo of author

By Gayathri

மத்திய அரசு வழங்கும் கிரெடிட் கார்டு!! மானியத்துடன் வழங்கப்படும் ரூ.30,000 லிமிட்!!

Gayathri

Credit card issued by the central government!! Subsidized limit of Rs. 30,000!!

கொரோனா காலகட்டம் தொடங்கிய நேரத்தில் மத்திய அரசாணத ஒரு முக்கிய நிதி உதவி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டமானது ஜூன் 1 2020 ஆம் ஆண்டு தெருவோர வியாபாரிகளுக்கு நன்மை பயக்கும் விதமாக பிரதான் மந்திரி தெரு வியாபாரி ஆத்ம நிர்பர் நிதி என்ற பெயரில் துவங்கப்பட்டது.

இதில் தெருவோர வியாபாரிகளுக்கு மானியத்துடன் கடன் வழங்கப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பின்படி கிரெடிட் கார்டு வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் 30 ஆயிரம் லிமிட் உடன் 7 சதவிகித ஆண்டு வட்டி என்ற விகிதத்தில் கிரெடிட் கார்டு வழங்க அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இதன் முதல் கட்டமாக 10,000 வரை செயல்பாட்டு மூலதன கடன் வழங்கப்படும் என்றும் அதனை சரியான நேரத்தில் திருப்பி செலுத்தும் பட்சத்தில் இரண்டாவது முறையாக 15,000 ரூபாயும் அதனைத் திருப்பி சரியாக செலுத்தும் பட்சத்தில் இறுதியாக 30,000 ரூபாய் வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை செலுத்துவதற்கான அதிகபட்ச காலமாக 36 மாதங்கள் மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கிரெடிட் கார்டு பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் :-

✓ கேஒய்சி ஆவணங்கள்
✓ ஆதார் அட்டை
✓ வாக்காளர் அடையாள அட்டை
✓ பான் கார்டு
✓ ஓட்டுநர் உரிமம்

இத்திட்டத்தின் மூலம் 30,000 மட்டுமல்லாது 50,000 வரையிலான கடன் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. இதழ் தொகையானது முழுவதுமாக ஒரே மானியமாக செலுத்தப்படும் என்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ள கூடிய விற்பனையாளர்களுக்கு ஒரு வருடத்திற்கு 1200 வரை கேஷ் பேக் கிடைக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.