கலைஞரின் பிறந்தநாளையொட்டி தேனியில் கலைக்கட்டிய கிரிக்கெட் போட்டி! பரிசுகளை அள்ளி சென்ற வீரர்கள்!

Photo of author

By Rupa

கலைஞரின் பிறந்தநாளையொட்டி தேனியில் கலைக்கட்டிய கிரிக்கெட் போட்டி! பரிசுகளை அள்ளி சென்ற வீரர்கள்!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99-பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற தேனி மாவட்ட அளவிளான கிரிக்கட் போட்டி பத்து நாட்களுக்கு மேலாக நடைபெற்றது போட்டியில் இறுதியில் மூன்று அணிகள் வெற்றி பெற்றனர் முதல்

அணி தமிழன் கிரிக்கட் கிளப் தெ.கள்ளிப்பட்டி இரண்டாம் அணி வசந்த் CC அணி வத்தலக்குண்டு மூன்றாம் அணி இந்துஸ்தான் B காந்திநகர் பெரியகுளம் அணி வெற்றி பெற்றது முதல் பரிசு கோப்பையை வழங்குபவர் தொழில் அதிபர் திமுக பிரமுகர் S.V.மகேந்திரவர்மன் வழங்கினார்.

இரண்டாவது பரிசு பெரியகுளம் நகர்மன்ற தலைவர் சுமிதா சிவகுமார் பெரியகுளம் நகர்மன்ற துணைத்தலைவரும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நகர பொருளாளர் பிரேம்குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர் சுதா நாகலிங்கம் மற்றும் கீழ வடகரை ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி செல்வராஜ் மற்றும் வயன் ராஜசேகர் ஆகியோர் வழங்கினர்.மூன்றாம் பரிசு தென்கரை பேரூராட்சி தலைவர் வே.நாகராஜ் தாமரைகுளம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி, துனைத்தலைவர் பொன்.சேதுராமன் திமுக பேரூர் இளைஞர் அணி அப்பாஸ் மைதீன், மற்றும் கவுன்சிலர்கள் தாமரைக் குளம் ஆகியோர் வழங்கினர்.

நியமனக் குழு தலைவர்பாலாமணி பழனிமுருகன்,தேவகி தென்னரசு, தென்கரை கைலாசம்,முனியம்மாள் ஆகியோர் வழங்கினர் முன்னதாக சிறப்பு விருந்தினர்கள் அணைவருக்கும் சிறந்த நகர்மன்ற தலைவர் விருது, சிறந்த பேரூராட்சி தலைவர் விருது, சிறந்த வார்டு உறுப்பினர்கள் விருது, சிறந்த சமூக சேவகர் விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டது விசிக மாவட்ட அமைப்பாளர் இரா.சேகுவேரா மற்றும் தென்கரை பேரூர் செயலாளர் இரட்டைமலை ரமேசு,விஜி மணிவாசம் ஆகியோர் ஆட்ட நாயகர் விருது வழங்கி சிறப்பித்தனர்.இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த தமிழன் கிரிக்கெட் கிளப் JP.ஜெயப்பாண்டி, இராவணவரதன், ஈஸ்வரன், சக்திவேல், கார்னமூர்த்தி, ரவி ஆகியோருக்கு அனைவராலும் நினைவுப்பரிசு வழங்கி சிறப்பு செய்தனர்.