கிரிக்கெட் ஜாம்பவானிடம் பாராட்டு பெற்ற நடிகர் சூரியின் மகன்

Photo of author

By CineDesk

கிரிக்கெட் ஜாம்பவானிடம் பாராட்டு பெற்ற நடிகர் சூரியின் மகன்

பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரிடம் சூரியின் மகன் பாராட்டு பெற்றுள்ளதை புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூரி வெளியிட்டு வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். நடிகர் சூரியின் மகன் சஞ்சய் தற்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் சமீபத்தில் 14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார். மதுரையில் நடைபெற்ற இந்த போட்டியை நேரில் காண வந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிசந்திரன், சூரியின் பேட்டிங் மற்றும் பவுலின் திறமையை பார்த்து வியந்தார்.

போட்டி முடிந்தவுடன் அவரை நேரில் அழைத்த அஸ்வின், அவருக்கு சில டிப்ஸ்களை கொடுத்ததோடு அவருடைய விளையாட்டு மேலும் திறம்பட தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அஸ்வின் மற்றும் சூரியின் மகன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நடிகர் சூரி, தனது மகன் வருங்காலத்தில் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக வருவார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக தெரிவித்து உள்ளார். சூரியின் நம்பிக்கை நிறைவேற அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/B6NOwRoBbPF/