நீட் தற்கொலை: அப்போ எடப்பாடி இப்போ மோடியா? ஆட்சிக்கு ஏற்றவாறு காட்சியை மாற்றும் திருமாவளவன்
இன்று மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்ற சூழலில் தேர்விற்கு தயாராகி வந்த சேலத்தை சேர்ந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே இந்த நீட் தேர்வை நடத்த கூடாது என தமிழக அரசியல் கட்சிகள் போராடி வரும் இந்த சூழலில் இவ்வாறு மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்வது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டுரை சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் ஏற்கனவே இரண்டு முறை நீட் தேர்விற்கு முயற்சித்த நிலையில் இன்று தற்கொலை செய்து கொண்டார்.திமுக ஆட்சிக்கு வந்தால் உடனடியாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் கூறியது என்னவாச்சு என்று பல தரப்பினரும் கேள்வி எழுப்பி வரும் சூழலில் மாணவர் தினேஷ் மரணம் தமிழக அரசியலில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மாணவனை இழந்த பெற்றோருக்கு அதிமுக மற்றும் திமுகவை சேர்ந்த பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் மாணவனுக்கு நேரில் சென்று அஞ்சல் செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில் மாணவன் தற்கொலைக்கு காரணமாக இருந்த நீட் தேர்வுக்கு எதிராக அனைவரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.அந்தவகையில் விசிக தலைவர் திருமாவளவன் இதற்கு மோடி அரசு தான் காரணம் என கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அதாவது கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நீட் தேர்வு பயத்தின் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட போது திமுக,விசிக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.குறிப்பாக நீட் தேர்வில் பிடிவாதமாக இருந்த பாஜக தலைமையிலான மத்திய அரசை விட எடப்பாடி பழனிசாமி தலைமையிலான மாநில அரசை எதிர்த்து கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
இந்நிலையில் திமுகவின் கூட்டணி கட்சியான விசிக தலைவர் திருமாவளவன் மாநில அரசை பற்றி எதுவும் பேசாமல் நேரிடையாக மத்திய அரசை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அதாவது தற்போது மாநிலத்தில் தங்களுடைய கூட்டணி ஆட்சியில் இருப்பதால் அவரின் பேச்சு இப்படி இருப்பதாகவும்,ஆட்சி மாறியதும் காட்சியை மாற்றியது அவரின் இரட்டை வேடத்தை காட்டுவதாக விமர்சிக்கபடுகிறது.