திமுக தலைவர் ஸ்டாலினின் அடுத்தடுத்த உளறல் பேச்சால் புலம்பும் திமுக தொண்டர்கள்

0
1060

திமுக தலைவர் ஸ்டாலினின் அடுத்தடுத்த உளறல் பேச்சால் புலம்பும் திமுக தொண்டர்கள்

மக்களவை தேர்தல் வருவதையடுத்து தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளான திமுக,அதிமுக என அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாஜகவின் மீதான அதிருப்தியை சரியாக பயன்படுத்த நினைத்த காங்கிரஸ் திமுக உடனான கூட்டணியை உறுதி செய்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று கள்ளகுறிச்சியில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தலில் கூட்டணி என்பது விருப்பத்தோடு அமைய வேண்டும் என்றும்,கட்டாயப்படுத்தி அமைக்க கூடாது என்றும் விமர்சனம் செய்திருந்தார்.மேலும் தற்போதைய ஆளும் அதிமுக அரசை நிலையில்லாதது என்றும் அது உடைந்த நாற்காலியை போல எப்போது வேண்டுமென்றாலும் கவிழும் என்று கூறினார்.

அடுத்து பேசிய அவர் திமுக வின் ஆட்சி காலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஜப்பான்துணைமுதல்வராக இருந்த போது மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்ததாக உளறி கொட்டினார்.

என்ன பேச வேண்டும் என்பது பற்றி துண்டு சீட்டில் எழுதி கொடுத்ததை கூட சரியாக படிக்காமல் ஏற்கனவே பலமுறை இது போல உளரியிருக்கிறார்.தமிழக்கத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் மட்டுமில்லாமல் சமீபத்தில் மேற்கு வங்காளத்தில் நடந்த கூட்டணி கட்சிகளின் நிகழ்ச்சியிலும் உளரியிருந்தார்.

ஏற்கனவே பழமொழியை கூட சரியாக சொல்ல தெரியாதவர் என்று சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வரும் வேளையில் தற்போது மீண்டும் ஸ்டாலின் உளரியது திமுக தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள நினைத்த எதிர்க்கட்சிளும் இளைஞர்களும் #ஜப்பான்துணைமுதல்வர்ஸ்டாலின் என்ற ஹேஸ்டேக்கில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சில பதிவுகள்

https://twitter.com/Bjpharikrishnan/status/1097229503326085120?s=19
#ஜப்பான்துணைமுதல்வர்ஸ்டாலின்

https://twitter.com/Bjpharikrishnan/status/1097229465090809856?s=19
#ஜப்பான்துணைமுதல்வர்ஸ்டாலின்
https://twitter.com/avavinoth/status/1097170610126503936?s=19
Previous articleவன்னியர் சங்க தலைவரான மாவீரன் ஜெ குரு அவர்களின் பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது
Next articleசரக்கு மிடுக்கு இருப்பதாக பேசிய திருமாவளவனை கூட்டணியில் வைத்து கொண்டு பொள்ளாச்சி விவகாரத்தை பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி இருக்கிறதா?