உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கிய இளைஞர் அணி செயலாளர் பதவியால் நேர்ந்த அசிங்கம் #உதயநிதிக்கு_மண்டியிட்ட_திமுக

0
278
criticism-against-udhayanidhi-stalin/
criticism-against-udhayanidhi-stalin/

உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கிய இளைஞர் அணி செயலாளர் பதவியால் நேர்ந்த அசிங்கம் #உதயநிதிக்கு_மண்டியிட்ட_திமுக

முன்னாள் திமுக தலைவரும்,முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி அவர்களின் மறைவிற்கு பிறகு ஸ்டாலின் திமுகவின் தலைவராக பொறுப்பேற்றார். திமுக தலைவராக பதவியேற்பதற்கு முன்பு திமுகவின் செயல் தலைவராகவும் அதற்கு முன்னதாக இளைஞர் அணி தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு பிறகு அந்த பதவிக்கு வந்த அவரது வாரிசான மு.க.ஸ்டாலின் தனக்கு பிறகு தன்னுடைய வாரிசான உதயநிதி ஸ்டாலினை கட்சிக்குள் நுழைக்க தீவிரமாக செயல்பட்டு வந்தார்.அதுவும் ஆரம்பத்தில் தான் வகித்த இளைஞர் அணியில் பதவியை வழங்க திட்டமிட்டு வந்தார்.

இந்நிலையில் ஜெயலலிதா மறைவினால் ஏற்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் விட்டது, அவரது தொகுதியான ஆர்.கே நகரில் நடந்த இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழந்து படு தோல்வியடைந்து மற்றும் ஸ்டாலினின் கடந்த கால உளறல் பேச்சுக்களையெல்லாம் பார்க்கும் போது ஸ்டாலின் திமுகவை சரியாக வழி நடத்துவாரா? ஸ்டாலினால் திமுகவை தேர்தலில் வெற்றி பெற வைக்க முடியுமா? மக்கள் ஸ்டாலின் தலைமையை ஏற்பார்களா என பல கேள்விகள் தொடர்ந்து எழுந்து வந்தன.

இவ்வளவு கேள்விகளுக்கும் மத்தியில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக அதிக இடங்களை பெற்று வெற்றி பெற்றது. இத்துடன் நடத்தபட்ட தமிழக மக்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை பெற்று ஆட்சியை கவிழ்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எதிர்பார்த்த அளவு இடைத்தேர்தலில் வெற்றி கிடைக்கவில்லை என்பதால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியே தொடர்கிறது. இவ்வாறான நிலையில் இந்த தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் மத்தியில் ஸ்டாலின் திமுக தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அரசியல் ஆர்வலர்கள் பேசி வருகின்றனர். 

இந்நிலையில் ஏற்கனவே எதிர்பார்த்தது போல தற்போது திமுகவின் இளைஞரணி செயலாளர் பதவியை ஸ்டாலின் மகனான உதயநிதி ஸ்டாலினிற்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திமுகவில் வாரிசு அரசியல் அதிகம் இருப்பதாக பேசப்படும் நிலையில் கட்சிக்கு உதயநிதி ஸ்டாலினை விட அதிகமாக உழைத்தவர்களையெல்லாம் விட்டு அரசியலில் நுழைந்து ஒரு வருடம் கூட ஆகாத உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த பதவியை வழங்கியது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. 

இதையடுத்து உதயநிதி திமுகவின் இளைஞரணி செயலாளரானதை விரும்பாதவர்களும், மாற்று கட்சியினரும் #உதயநிதிக்கு_மண்டியிட்ட_திமுக என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி டுவிட்டரில் தேசிய அளவில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

அவ்வாறு அவர்கள் பதிவிட்டவைகளில் சில பதிவுகளை கீழே காணலாம்.

#உதயநிதிக்கு_மண்டியிட்ட_திமுக #உதயநிதிக்குமண்டியிட்டதிமுக

Previous articleடி.ஆர்.பாலு உதயநிதி ஸ்டாலினுக்கு மாமாவா? அவரே வெளியிட்ட பரபரப்பு தகவல்
Next articleஅன்புமணி ராமதாசால் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தொடங்குவதற்கு முன்பே மூடப்படும் அவலநிலை