இந்திய கிரிக்கெட்டில் மிக முக்கிய தொடரான ஐ பி எல் தொடரின் மெகா ஏலம் நேற்று தொடங்கி இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த மெகா ஏலத்தில் எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அதில் CSK அணி முக்கிய வீரரை இரண்டாவது நாளான இன்று வாங்கியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இங்கிலாந்து நாட்டின் ஆல் ரவுண்டர் சாம் கரன் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு சீசன்களில் விளையாடினார். அந்த சீசன்களில் அவர் சிறப்பாக விளையாடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவருக்கு சுட்டி குழந்தை என்ற செல்ல பெயரும் வைத்துள்ளனர். அதன் பின் அவர் பஞ்சாப் அணியில் வாங்கபட்டார்.
தற்போது அனைத்து ipl ரசிகர்களும் மீண்டும் CSK அணி வாங்குமா? என பெரும் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. இவர் பேட்டிங் மட்டுமல்லாமல் பவுலிங் சிறப்பாக வீசக்கூடிய சிறந்த ஆல்ரவுண்டர். இவரை இந்த ipl 2025 மெகா ஏலத்தில் ரூ.2.4 கோடிக்கு வாங்கியுள்ளது.
இந்த ஐ பி எல் தொடரில் பதிரானவுடன் இணைந்து சாம் கரன் பந்து வீசுவார். மேலும் பேட்டிங்க்ளிலும் சிறப்பாக விளையாட கூடிய வீரர். இவர் இதுவரை CSK அணிக்காக விளையாடி 24 விக்கெட்டுகளும், 242 ரன்களும் அடித்துள்ளார். இன்னும் அடுத்தடுத்த வீரர்களுக்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஏலத்தை கவனித்து வருகின்றனர்.