ஐ பி எல் 2025 மெகா ஏலம் வருகிற நவம்பர் மாத கடைசியில் சுத்தி அரேபியாவில் நடைபெற உள்ளது. இந்த மெகா ஏலத்திற்கு முன் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியின் தக்கவைக்கப்பட்ட வீரர் பட்டியலை அக்டோபர் 31 நாளை வெளியிட வேண்டும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியின் கேப்டன் கே எல் ராகுல் அதிரடியாக அந்த அணியில் இருந்து நீக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் கே எல் ராகுல் அந்த அணியில் இருந்து வெளியேறினால் csk அணி அவரை எடுக்க போவதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கூறிய அவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கே எல் ராகுல் அனைத்து சீசனிலும் 500 முதல் 600 ரன்கள் வரை அடிக்கிறார் அப்படி பார்க்கும்போது அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் ஆனால் அவர் ஸ்ட்ரைக் ரேட் குறைவாகவே உள்ளது அதை நினைத்து பலர் அழுகின்றனர். நானும் அதுகுறித்து ஒரு மீம் பார்த்தேன் அதில் கே எல் ராகுலுக்கு 30 வயதிற்கு மேல் ஆகிவிட்டது மேலும் திருமணம் ஆகி விட்டது இத்துடன் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிந்தது என்றும் கூறுகின்றனர்.
இவரை பெங்களூர் அணி மற்றும் மும்பை, கொல்கத்தா, பஞ்சாப் அணிகளும் வாங்க முயற்சி செய்யும் எனவே csk அணி இவரை ஏலத்தில் எடுக்குமா? இல்லை அவர் மீண்டும் lsg அணியால் தக்கவைக்க படுவாரா? என்பது நாளை தெரியும்.