சி எஸ் கே அணியில் இருந்து விலகலா?…. சமூகவலைதளத்தில் ஜடேஜா செய்த விஷயம்!

சி எஸ் கே அணியில் இருந்து விலகலா?…. சமூகவலைதளத்தில் ஜடேஜா செய்த விஷயம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 10 ஆண்டுகளாக விளையாடி வருபவர் ரவீந்தர ஜடேஜா.

இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக ஜடேஜா சி எஸ் கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்ததை அடுத்து அவர் கேப்டன் பொறுப்பை துறந்தார். மீண்டும் தோனி கேப்டன் ஆனார். ஆனாலும் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

தோனி, ஜடேஜாவை சுதந்திரமாக செயல்பட விடாததால் அவருக்கும் தோனிக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்ததாகவும் சொல்லப்பட்டது. கடைசி சில போட்டிகளை ஜடேஜா விளையாடாதது மேலும் சந்தேகங்களைக் கிளப்பியது.

இந்நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம், சமூகவலைதளங்களில் ஜடேஜாவை பின் தொடர்வதை நிறுத்தியது. அதுபோல சி எஸ் கே சம்மந்தமான பதிவுகளை ஜட்டு நீக்கினார். இதனால் அவர் தொடர்ந்து சி எஸ் கே அணியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையடுத்து இப்போது ஜடேஜா செய்துள்ள விஷயம் ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சி எஸ் கே அணியில் ஜடேஜா இணைந்து 10 ஆண்டுகள் ஆனதை குறிப்பிட்டு அணி நிர்வாகம் ஒரு ஸ்டேட்டஸை இட அதில் இன்னும் 10 ஆண்டுகள் என்று ஜடேஜா பதிலளித்து இருந்தார்.

ஆனால் அதை இப்போது நீக்கியுள்ளார். இதன் மூலம் அவர் மீண்டும் சி எஸ் கே அணிக்கு விளையாடா மாட்டார் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகியுள்ளது.