இந்தியா நியூசிலாந்து தொடரில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. இதுகுறித்து CSK நிர்வாகத்தின் மீது கண்டனம் தெரிவித்துள்ளார் முன்னாள் CSK அணியில் வீரர் ராபின் உத்தப்பா.
இந்தியாவில் நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இதற்கு முன் இந்திய அணி 12 ஆண்டுகளுக்கு முன் சொந்த மண்ணில் தொடரை இழந்திருந்தது. அந்த சாதனையை முறியடித்துள்ளது நியூசிலாந்து அணி.
நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தவர்கள் முக்கியமானவர் ரச்சின் ரவீந்திரா இவர் முதல் போட்டியில் சதம் விளாசினார். இவர் இரண்டாவது போட்டியில் ஆட்டமிழக்காமல் 39 ரன்கள் எடுத்திருந்தார் இவர் நியூசிலாந்து வெற்றிக்கு முக்கியமானவர். இவர் இந்த தொடரில் விளையாடும் முன் CSK அணி நிர்வாகம் தனது அகாடமியில் பேட்டிங் பயிற்சி செய்ய அனுமதித்துள்ளது.
இதுகுறித்து பேசிய முன்னாள் CSK வீரர் ராபின் உத்தப்பா CSK அணி நிர்வாகம் அணி வீரர்களை கவனித்துக் கொள்வதில் சிறந்த நிர்வாகம் அதில் ஏதும் மாற்றம் இல்லை, ஆனால் நாடு என்று வரும்போது ஒரு கோடு இருக்க வேண்டும் என்று கூறினார் . அந்த பயிற்சிதான் இந்தியா நியூசிலாந்து போட்டியில் அவருக்கு முக்கிய காரணமாக இருந்தது.