IPL: அடுத்த ஆண்டு ஐ பி எல் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினை csk அணி வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ பி எல் போட்டியானது மார்ச் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த ஐ பி போட்டியின் மெகா ஏலமானது இந்த மாதம் 25, 26 தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்கு முன் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியின் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை அக்டோபர் 31 ம் தேதி வெளியிட உத்தரவிட்டது பிசிசிஐ.
அனைத்து அணிகளும் தங்கள் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் எதிர்பாராத வகையில் முக்கிய வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து எந்த அணி யாரை ஏலத்தில் எடுக்க போகிறது என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
சில வாரங்களுக்கு முன் இந்திய சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் விடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் அவர் வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை நான் நம்புகிறேன். நான் கிரிக்கெட் விளையாட்டு எங்கு தொடங்கினேனோ அங்கேயே முடித்து கொள்ள ஆசைபடுகிறேன் என்று கூறியிருந்தார்.
எனது கிரிக்கெட் வாழ்க்கை csk வில் தான் தொடங்கியது அதேபோல் கடைசி காலமும் csk வில் தான் முடிய வேண்டும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று அவர் கூறியிருந்தார். அதற்கேற்ற சூழல் உருவாகியுள்ளது. இதற்கு முன் இவர் ராஜஸ்தான் அணியில் விளையாடி வந்த நிலையில் தற்போது அந்த அணி அவரை விடுவித்துள்ளது.
அஸ்வினை வாங்குவது அவ்வளவு எளிதாக இருக்க வாய்ப்பில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் ஆப் ஸ்பின்னர்கள் குறைவாகத்தான் உள்ளனர். அதனால் csk அணி அஸ்வினை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு அதிக தொகையை ரூ.8 கோடி வரை வாங்க முயற்சி செய்யும் என எதிர்பார்க்கபடுகிறது.