நேற்றைய 49 வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான ஒரு தோல்வியை பதிவு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான ருதுராஜ் நிதானமாக ஆடி அரைசதம் (62 ரன்கள்) கண்டார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரனான ரஹானே 24 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மற்ற ஆட்டக்காரர்கள் சொற்பரண்களுக்கு அடுத்தடுத்து ஆட்டம் இழக்க, இறுதியில் களமிறங்கிய தோனி தனது பங்குக்கு ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 11 பந்துகளில் 14 ரன்களை சேர்த்து ரன் அவுட் ஆகினார்.
கடந்த எட்டு ஆட்டங்களாக அதிரடியாக ஆடிய தோனி, இந்த முறை ரன் சேர்க்க முடியாமல் கடைசியில் தனது விக்கெட்டையும் பறிகொடுத்தார்.

This Yellove for Thala is beyond boundaries! 🥳💛#CSKvPBKS
#WhistlePodu

pic.twitter.com/fRnt2Xk2Wx

Chennai Super Kings (@ChennaiIPL) May
1, 2024

20 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெடுகளை இழந்து 162 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 17.5 ஓவர்களில், மூன்று விக்கட்டுகளை மட்டும் இழந்து, அபார வெற்றியை பதிவு செய்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் இன் கிங்ஸ் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக எட்டு ஓவர்களில், 19 டாட்பால், ஒரு பவுண்டரி கூட எடுக்காததே என்று கிரிக்கெட் விமர்சகர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பஞ்சாப் அணியின் லெக் பிரேக் கூகிளி பவுலர் ராகுல் சாகர் மற்றும் இடது கை ஸ்பின்னர் ஹர்ப்ரித் பிரார் வீசிய எட்டு ஓவர்களில் 19 டாட் பால், ஒரு பவுண்டரி கூட கொடுக்கவில்லை. எட்டு ஓவர்களில் இருவரும் சேர்த்து 33 ரன்களை மட்டுமே கொடுத்துள்ளனர்.
மேலும் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியை வெற்றி கனவை தகர்த்தெறிந்துள்ளனர்.
மேலும் இதில் ஒரு சுவாரசியம் உள்ளது. கடந்த 5 லீக் ஆட்டங்களில் பஞ்சாப் அணியிடம் சென்னை அணி தொடர் தோல்வியை சாந்தி வருகிறது.