இதான் கடைசி ஆட்டம்! Bye சொல்ல இருந்தேன்! தோனி சிக்சர்! தோல்விக்கு காரணம் இதுதானா?!

0
248
ms dhoni csk rcb
ms dhoni csk rcb

ஐபிஎல் தொடரில் நேற்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த ஆட்டத்தில் விராட் கோலியின் அதிர்ச்சி விக்கெட், டு பிளசியின் ரன் அவுட், தினேஷ் கார்த்திக்கின் அதிரடி, மேக்ஸ்வெலின் சிறப்பான ஆட்டம், ருத்ராஜ் டக்-அவுட், ரச்சின் ரவீந்திராவின் ரன்அவுட், சிவம் துபே பந்துகளை முழுங்கி ரன் அடிக்க முடியாமல் திணறி கடைசியில் அவுட் ஆகி வெளியேறியது, கடைசி ஓவர் பரபரப்பு என ஆட்டம் ஒவ்வொரு கட்டத்திலும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் பல்வேறு திருப்பு முனைகளுடம் அமைந்தது.

இந்த ஆட்டம் முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்கி பாராட்டு தெரிவித்து கொண்டிருக்க, சென்னை அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி மட்டும் பெங்களூர் அணி வீரர்களுடன் கை கொடுக்காமல் புறக்கணித்து சென்றது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பல்வேறு தரப்பினரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, தமிழகத்தை சேர்ந்தவரும் பெங்களூர் அணியின் விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக், எங்களின் வெற்றிக்கு எம்.எஸ். தோனியின் கடைசி சிக்ஸர் தான் காரணம் என்று ஒரு குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.

அவரின் அந்த பேட்டியில், கடைசி ஓவரின் முதல் பந்தை மைதானத்திற்கு வெளியே 110 மீட்டருக்கு மகேந்திர சிங் தோனி சிக்ஸர் அடித்தார். இதனால் புதிய பந்து வழங்கப்பட்டது.

வெளியே சென்ற ஈரமான பந்தை விட, இந்த புதிய பந்து வீச எளிதாக எங்களுக்கு அமைந்தது. அதனால் தான் எம் எஸ் தோனி அடுத்த பந்திலையே ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார் என்றார்.

Dhoni should learn how to handle loss with grace from Kohli. Handshake is one of the great things about our game. If it was Kohli, many would have called him egoistic.
- @MichaelVaughan @msdhoni We are not expected THIS from you😑#RCBvsCSK #Bengaluru #MSD pic.twitter.com/MKL1FOLlGS
— ABHI (@Abhi_kiccha07) May 19, 2024

மேலும், “முதல் 8 போட்டிகள் எட்டு போட்டிகளில் ஏழு போட்டிகளில் தோற்று விட்டோம், சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டம் தான் எனது கடைசி ஆட்டமாக இருக்கும் என மூன்று வாரங்களுக்கு முன்பு நான் நினைத்திருந்தேன். அதற்காக அனைவரையும் அழைத்து Bye சொல்லிவிடலாம் என்று எதிர்பார்த்து காத்திருந்தேன். ஆனால் தற்போது இன்னும் சில போட்டிகளில் விளையாட வேண்டிய நிலை வந்துள்ளது” என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இது அவரின் ஓய்வு முடிவை மறைமுகமாக தெரிவித்து இருக்கிறார் என்றும் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.