6 ஆண்டுகள் விளையாடிய வீரரை அம்போன்னு விட்ட csk!!  திட்டம் போட்டு தூக்கிய மும்பை அணி!!

IPL: CSK அணியின் ஸ்விங்கிங் என அழைக்கப்பட்ட தீபக் சஹார் இந்த முறை வாங்கவில்லை தட்டி தூக்கிய மும்பை அணி.

ஐ பி எல் தொடரின் மெகா ஏலம் தற்போது சவுதி அரேபியாவில் நேற்று தொடங்கி இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஐ பி எல் மெகா ஏலத்தில் எதிர் பாரத வீரர்கள் எதிர்பாராத விலைக்கு வாங்கப்பட்டனர் மற்றும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் வாங்கப்படவில்லை. இந்நிலையில் CSK அணியின் முக்கிய வீரரை mi அணி வாங்கியுள்ளது.

CSK அணிக்காக இதுவரை தீபக் சஹார் 6 ஆண்டுகள் விளையாடி உள்ளார். இவர் இதுவரை 81 போட்டிகளில் விளையாடி 77 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் புனே அணிக்காக விளையாடினார். அதன் பின் CSK அணியில் 2018 முதல் 2024 வரை விளையாடி வருகிறார்.

இவர் CSK அணியில் ரசிகர்கள் மத்தியில் ஒரு முக்கிய வீரராக பார்க்கப்பட்ட வீரர். இந்நிலையில் இந்த ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்  தீபக் சஹார் தக்கவைக்க படவில்லை. இந்நிலையில் ஏலத்தில் மீண்டும் CSK அணி வாங்கும் என எதிர்பார்க்கப்பட்ட  நிலையில் ஆனால் மும்பை அணி ரூ.9.25 கோடி க்கு வாங்கியுள்ளது. CSK ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கடைசி சீசனில் இவர் எட்டு இன்னிங்ஸில் மட்டுமே விளையாடினார் மற்ற போட்டிகளில் விளையாடவில்லை காயம் காரணமாக வெளியேறினார். இதற்கு முன் சில சீசன்களில் காயம் ஏற்பட்டு வெளியேறுவது வழக்கம் இந்த அணியிலாவது தொடர்ந்து விளையாடுவாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.