முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கடலூர் திமுக எம்.பிக்கு அக்டோபர் 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாளை பிற்பகல் வரை போலீஸ் காவலுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இன்றுடன் சிபிசிஐடி விசாரணை நிறைவடைந்துள்ளது. அதன் காரணமாக கடலூர் திமுக எம்.பிக்கு அக்டோபர் 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முந்திரி ஆலை தொழிலாளர் கோவிந்தராஜ் திமுக எம்.பி அமைச்சருக்கு சொந்தமான ஆலையில் பணிபுரிந்துள்ளார். கடந்த 5 வருடமாக பணிபுரிந்து வரும் கோவிந்தராஜ் சமீபத்தில் வேலைக்கு சென்றபோது மர்மமான முறையில் இறந்துள்ளார்.
இதனையடுத்து, எனது தந்தையை அடித்து கொன்று விட்டார் முந்திரி ஆலை ரமேஷ் எம்.பி என கோவிந்தராஜ் மகன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்தது காவல்துறை.
இதனையடுத்து திமுக எம்பி ரமேஷை கைது செய்ய பல்வேறு தரப்பினரும் போராட்டம் செய்த நிலையில், திமுக எம்பி ரமேஷ் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்து பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்நிலையில், அக்டோபர் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்