மாணவனை கொடூரமாக அடித்து,காலால் எட்டி உதைத்த அரசு பள்ளி ஆசிரியர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.!!

0
254

கடலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவனை ஆசிரியர் ஒருவர் பிரம்பால் அடித்து, காலால் எட்டி உதைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உளாள அரசு பள்ளியில் படிக்கும் மாணவர் வகுப்புக்கு சரியாக வராமல் இருந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த பள்ளி ஆசிரியர் அவனை முட்டி போட வைத்துள்ளார்.

அதன்பிறகு, அங்கு இருந்த பிரம்பால் அந்த மாணவனை கடுமையாக அடித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் அந்த ஆசிரியர் அந்த மாணவனை தனது கால்களால் எட்டி உதைத்தும் இழிவாக பேசி மோசமாக அடித்துள்ளார். இதனை அங்கிருந்த சக மாணவர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அதனை அந்த மாணவர் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

தற்போது மாணவனல கொடுமையாக தாக்கிய ஆசிரியர் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/ashok4thangaraj/status/1448350314613010434?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1448350314613010434%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=http%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F

இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக அந்த மாணவனை கடுமையாக தாக்கிய ஆசிரியர் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Previous articleகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கடலூர் திமுக எம்.பிக்கு 27ம் தேதி வரை காவல்.!!
Next articleஒரே நாளில் ரூ.36,000 தாண்டிய தங்கத்தின் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here