“வன்முறை கலாச்சாரத்தை அனுமதிக்க கூடாது” மக்கள் நீதிமய்யம் தலைவர் கமலஹாசன் வலியுறுத்தல்!!
மக்கள் நீதிமய்யம் தலைவர் கமலஹாசன் அவர்கள் வெளியிட்டு அறிக்கையில், தமிழகத்தில் பாஜக இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நிர்வாகிகள் வீடுகள் மற்றும் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறினார். எதிர்வரும் காந்தி ஜெயந்தியை ரத்தத்தால் கொண்டாட நினைப்பவர்களை வன்மையாக எதிர்ப்பதாக அவர் கூறினார். மேலும் எந்த சூழ்நிலையிலும் தமிழக மண்ணில் வன்முறை கலாச்சாரத்தை அனுமதிக்க மாட்டோம் என்றார். அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தை வன்முறை பூமியாக மாறுவதை அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.