மாதவிடாய் காலங்களில் வயிற்று வலியை போக்கும் சீரகம்!
இந்த சீரக தண்ணீரை காலை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் உண்டாகிறது.செரிமான பிரச்சனை சீராகும்.சீரகம் செரிமானத்திற்கு மிகவும் நல்லது .நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள். இந்த சீரகத் தண்ணீரை காலை வெறும் வயிற்றில் குடித்து வர செரிமான மண்டலம் சீராக இயக்கப்பட்டு செரிமான பிரச்சனைகளான அஜீரணம், வயிற்று வலி ,வயிறு உப்புசம், வாய்வு பிரச்சனை, நெஞ்செரிச்சல், போன்ற பிரச்சனைகள் எளிதில் குணமாகும். சீரகத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து மலச்சிக்கலையும் தடுக்கிறது.
சீரகம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. அடிக்கடி தொற்று நோயால் அவதிப்படுபவர்கள். இந்த சீரகத் தண்ணீரை குடித்து வர நோய் எதிர்ப்பு சக்தி வலுபெறும். இதன் மூலமாக பிற நோய்கள் வருவதை எளிதில் தடுக்க முடியும்.
அதிக உயர் ரத்த அழுத்தத்தினால் அவதிப்படுபவர்கள் .காலை வெறும் வயிற்றில் சீரக தண்ணீரை குடித்து வர சீரகத்தில் இருக்கக்கூடிய பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக்கி உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இந்த நீரை தொடர்ந்து குடித்து வர ரத்த அழுத்தம் முற்றிலும் குணமாகும்.
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் .ரத்தசோகை பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் காலை வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீரை குடித்து வர இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான இரும்புச்சத்து புதிய ரத்த செல்களை உற்பத்தி செய்கிறது. இதன் மூலமாக ரத்த சோகை வராமல் தடுக்கப்படுகிறது. மேலும் மாதவிடாய் வலியை போக்குகிறது பெண்கள் பலரும் இந்த மாதவிடாய் பிரச்சினையினால் அவதிப்படுகின்றன. இந்த சீரகத்தை கொதிக்க வைத்து குடித்து வர மாதவிடாய் வலி முற்றிலும் குணமாகிறது.