திருமணம் செய்யலாம் என கூறி பல பெண்களை மோசடி செய்த மன்மதன்!

0
170
Cupid who cheated many lakhs by claiming that he can get married!
Cupid who cheated many lakhs by claiming that he can get married!

திருமணம் செய்யலாம் என கூறி பல பெண்களை மோசடி செய்த மன்மதன்!

பெங்களுரு ஒயிட்பீல்டு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில், வசித்து வருபவர் 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண். இவர் சமீபத்தில் ஒரு ஒயிட்பீல்டுபொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் எனது புகைப்படம் மற்றும் விவரங்களை திருமண இணையதளத்தில் பதிவு செய்திருந்தேன். அதனைத் தொடர்ந்து என் செல்போனுக்கு ஒரு நபர் என்னை அழைத்துப் பேசினார்.

அவர் என்னைத் திருமணம் செய்வதாகவும் கூறினார் நானும் அதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில் உறவினருக்கு உடல்நிலை சரியில்லை என்று என்னிடம் ரூபாய்7. 70 லட்சம் வாங்கி மோசடி செய்துவிட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்களை ஏமாற்றிய வாலிபர் ஒருவரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர் மைசூர் மாவட்டம் பிரியப்பட்டணா தாலுகா பைலகுப்பே கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், 33 வயதான நபர் என்பதும் தெரியவந்தது. அவர் திருமண இணையதளங்களில் மாப்பிள்ளை தேடி விளம்பரம் செய்யும் பெண்களின் செல்போன் எண்களை எடுத்துக் கொள்வார். அதன் பின் அந்த பெண்களிடம் நான் மைசூர் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றும், தற்போது சாஃப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருவதாகவும் கூறி அவர்களுடன் பழகுவார்.

அதன்பின் உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றும் கூறுவார். அதன் பின் சில நாட்கள் அவர்களுடன் பழகி விட்டு ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி லட்சக்கணக்கில் பணத்தை பெற்று மோசடி செய்து வந்தது தெரியவந்தது. இதுவரை கல்லூரி பேராசிரியை உட்பட ஏராளமான பெண்களிடம் மொத்தம் 42 லட்சத்தை இவர் மோசடி செய்துள்ளார் என தெரிய வந்தது. தன்னிடம் பேசும் பெண்களிடம் இவர் தனது பெயரை சித்தார்த் அர்ஸ், சாண்டி, வினய், முத்து ஆகிய பெயர்களில் பேசி வந்ததும் அம்பலமாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை மேலும் விசாரித்து வருகின்றனர்.

Previous articleஅவர் மட்டும் பாமிற்கு திரும்பி விட்டால் போதும் உலக கோப்பை வசப்படும்! முக்கிய வீரர் வெளியிட்ட கருத்துக் கணிப்பு!
Next articleஇன்று இந்த ராசிக்கு கடன்பிரச்சனை தீரும்! இன்றைய ராசிபலன்கள்!!