மன்மதனே நீ கலைஞன் தான்!! மீண்டும் மீண்டுமா!!

0
3
Cupid, you are an artist!! Back again!!
Cupid, you are an artist!! Back again!!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்சமயம் லிட்டில் சூப்பர் ஸ்டாராக வளம் வரும் முண்ணனி நடிகர் தான் டி.ஆர்.சிலம்பரசன் (சிம்பு). தற்சமயம் இவர் நடிகர் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகி கொண்டிருக்கும் தக்லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் நடித்த 90களில் படங்கள் இன்றளவும் காதல் பேசும் வகையில் அமைந்திருந்தது. அதில் முக்கியமான படம்தான் “மன்மதனே நீ கலைஞன் தான்” என்ற பாடல் இடம் பெற்றிருக்கும் படம் தான் மன்மதன்.

கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான இப்படம் ஏ.ஜே.முருகன் இயக்கத்தில், யுவன் இசையமைப்பில், ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இப்படம் அன்றைய பொழுதிலேயே நல்ல வசூல் வேட்டையை அள்ளியது. வரும் பிப்ரவரி மூன்றாம் தேதி சிம்புவின் பிறந்தநாளையொட்டி இந்தப் படம் ரீ ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பாபா திரைப்படம் ரீரிலீஸின் போது பல ட்விஸ்ட்களையும் மேலும் இன்றைய காலத்து டெக்னாலஜியுடன் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. அதேபோல், இப்படத்தில் ஏதேனும் மாறுதல் எதிர்பார்க்கலாமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Previous articleபணவீக்கத்திற்கு வழி வகுக்கும் டிரம்பின் உத்தரவு!! இந்தியா எப்படிக் கையாளும்!!
Next article2025 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம்!! சூடுபிடித்து உள்ளது!!