உடலில் உருவாகும் கழிவுகளை வெளியேற்றி நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வேலையாளியாக சிறுநீரகம் செயல்படுகிறது.சிறுநீரகத்தில் உள்ள கழிவுகள் வெளியேறாமல் போனால் டயாலிசிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டுவிடும்.
நமது சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பிரத்யேக உணவுகளை நாம் உட்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.நீங்கள் நீண்ட நாட்களாக சிறுநீர் சம்மந்தபட்ட பாதிப்புகளால் அவதியடைந்து வருகிறீர்கள் என்றால் நீங்கள் நிச்சயம் உங்கள் உணவுப் பழக்க வழக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
சிறுநீரக நோய் வர காரணங்கள்:
**நீர்ச்சத்து குறைபாடு
**யூரிக் அமிலம் அதிகரித்தல்
**அதிக உப்பு நிறைந்த உணவுகள்
**சிறுநீர் கழிக்காமை
**யோனி தொற்று
சிறுநீரக நோய்கள்:
**சிறுநீரக கற்கள்
**சிறுநீர் பாதை தொற்று
**சிறுநீரக செயலிழப்பு
சிறுநீரக நோய் அறிகுறிகள்:
**சிறுநீர் கழிப்பதில் சிரமம்
**வயிற்று வலி
**சிறுநீர் நுரைத்து வெளியேறுதல்
**சிறுநீர் கழிக்கும் சமயத்தில் வலி மற்றும் எரிச்சல் உண்டாதல்
சிறுநீரக நோய் உள்ளவர்கள் பின்பற்ற வேண்டிய உணவுமுறை பழக்கங்கள்:]
புரதச்சத்து நிறைந்த ஆரோக்கிய உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் சிறுநீரக நோய்களை குணப்படுத்திக் கொள்ளலாம்.புரத உணவுகள் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
கோதுமை உணவுகள்,பனீர்,பருப்பு வகைகளை உட்கொள்வதன் மூலம் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
பால் மற்றும் பால் பொருட்களை உட்கொள்வதன் மூலம் சிறுநீரக நோய்களை குணப்படுத்திக் கொள்ள முடியும்.தயிர்,மோர் போன்றவை சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
திராட்சை சாறு பருகுவதால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மேம்படும்.சிறுநீரக நோய் உள்ளவர்கள் ஆலிவ் எண்ணெயில் சமைத்து உட்கொள்ளலாம்.சரியான அளவு கலோரிகளை உட்கொள்ள வேண்டும்.
குறைவான அளவு உப்பு சேர்த்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.சோடியம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.ஆப்பிள்,முள்ளங்கி,கீரை,அரிசி,வெங்காயம் உள்ளிட்டவற்றில் பொட்டாசியம் குறைவாக இருக்கிறது.