நெஞ்சு சளி ஒரே நாளில் குணமாக! இந்த இலை ஒன்று இருந்தால் போதும்!
அதிகப்படியான சளி மற்றும் இருமல் தொல்லைகளை குணப்படுத்தும் வழிமுறைகளை இந்த பதிவு மூலமாக தெரிந்து கொள்வோம்.
நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதன் காரணமாக பல விதமான பாதிப்புகள் ஏற்படுகிறது. நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் சரிவர கிடைக்காத பொழுது இவ்வித பாதிப்புகள் ஏற்படுகிறது.
நம் உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களின் அளவு அதிகரிப்பதன் காரணமாக சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனை எவ்வாறு சரி செய்து கொள்ளலாம் என்பதனை இந்த பதிவு மூலமாக விரிவாக காணலாம்.
நம் வீடுகளில் வளர்க்கக்கூடிய ஒரு தாவர வகை கற்பூர வள்ளியாகும். இதனை சளி, காய்ச்சல், இருமல் இருக்கும் பொழுது ஒரு இலையை பறித்து வாயில் போட்டு மெல்வதன் காரணமாக சளி, இருமல் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் முற்றிலும் குணமடைய உதவும்.
ஓமம் இதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் சளி, இருமல் போன்றவற்றை கட்டுப்படுத்த உதவுகிறது. நுரையீரலில் படிந்துள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழித்து சளி, இருமல் சம்பந்தப்பட்ட பாதிப்புகளை குணப்படுத்த உதவுகிறது. ஒரு கப் பாலுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் சேர்த்து பருகுவதன் காரணமாக நெஞ்சு சளியினை போக்கி இருமல் சளி வராமல் பாதுகாக்கிறது.
சளி, இருமலை குணப்படுத்தும் செய் முறையான பாத்திரத்தில் 300 மிலி நீர் சேர்த்து நான்கு கற்பூரவள்ளி இலை, ஒரு ஸ்பூன் ஓமம் மற்றும் ஐந்து மிளகு ஆகியவற்றை நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி அதன் பிறகு காலை நேரங்களில் பருகி வருவதன் காரணமாக இருமல், சளி போன்ற பாதிப்புகள் ஏற்படாதவாறு பாதுகாக்க உதவுகிறது.