நரம்பு தளர்ச்சி குணமாக! தாம்பத்தியம் சிறக்க இதை ஒரு ஸ்பூன் சாப்பிட்டாலே போதும்!!

0
274
#image_title

நரம்பு தளர்ச்சி குணமாக! தாம்பத்தியம் சிறக்க இதை ஒரு ஸ்பூன் சாப்பிட்டாலே போதும்!! 

நம்முடைய மூளை ஒரு ஜெனரேட்டர் போல மூளை சொல்கின்ற கட்டளையை செய்தியாக எடுத்துக் கொண்டு செல்வது தான் நரம்புகள். மூளையின் கட்டளைகள் நரம்புகளுக்கு சென்று சேர்வதில் தோய்வு ஏற்படுவது தான் நரம்பு தளர்ச்சி.

நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் எந்த வேலையும் செய்யாமல் இருக்கும் பொழுது உடல் சோர்ந்த நிலையில் காணப்படும். இதை ஆரம்பத்திலேயே சரி செய்ய வேண்டும். இல்லையெனில் ஆண்களை மிகப்பெரிய பாலியல் பிரச்சினையில் கொண்டு சென்று விட்டுவிடும்.

** வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும் பொழுது இந்த நரம்பு தளர்ச்சி குறைய ஆரம்பிக்கும். கோழியின் ஈரலில் வைட்டமின் பி12 அதிக அளவு உள்ளது.

** முட்டை மற்றும் தினமும் ஏதேனும் ஒரு பழங்கள் சாப்பிடும் போது வைட்டமின் பி12 நமக்கு கிடைக்கும்.

** அதேபோல் பால், கீரை வகைகள் அதிலும் குறிப்பாக பொன்னாங்கண்ணி கீரை, மணத்தக்காளி கீரை, போன்றவற்றை பகலில் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

** இரவு தூங்குவதற்கு முன்னால் பாலில் ஒரு சிட்டிகை ஜாதிக்காய் தூளை சேர்த்து பருகலாம்.

**  வாரத்திற்கு ஒரு முறை லவங்கப்பட்டையை போட்டு தண்ணீரை சுட வைத்துக் குடித்தால் நரம்புகள் பிரச்சனை சரியாகும்.

** எல்லா உணவுகளிலும் மஞ்சள் தூள், வெந்தயம் போன்றவற்றை சேர்த்துக் கொள்வது நல்லது.

** வயதானவர்களுக்கு நரம்பு தளர்ச்சி வந்து விட்டால் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்  அஸ்வகந்தா பொடியை வாங்கி அரை தேக்கரண்டி அளவு பாலில் கலந்து 45 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தாலே போதும்.

** அதேபோல் ஓரிதழ் தாமரை சூரணம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதையும் வாங்கி வந்து ஒரு ஸ்பூன் பாலில் கலந்து குடிக்கலாம். இந்த பொடியானது நரம்புத் தளர்ச்சியை சரி செய்வதோடு மட்டுமில்லாமல் ஆண்மை குறைவையும் சரி செய்யும்.

**  மேலும் நாட்டு மருந்து கடைகளில் பூனைக்காலி பொடி கிடைக்கும். இதை ஒரு ஸ்பூன் அளவு பாலில் கலந்து இரவு தூங்குவதற்கு முன்னால் 48 நாட்களுக்கு குடித்து வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.

**  10 திருநீற்று பச்சிலைகளை அரை ஸ்பூன் பனங்கற்கண்டோடு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் காய்ச்சிய பாலை சேர்த்து காலை நேரங்களில் குடித்து வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.

** இரவு நேரங்களில் செவ்வாழைப் பழங்கள் 48 நாட்களுக்கு சாப்பிட்டு வருவது நல்லது. ஆண்மைத்தன்மை மேம்படும்.

**  அதேபோல் மாதுளம் பழத்தை சாறு பிழிந்து அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர நரம்புகள் பலமாகும்.

** பொதுவாக நரம்பு தளர்ச்சி நம்மை நெருங்காமல் இருக்க பழங்கள், கீரைகள், காய்கள், வால்நட், பிஸ்தா, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, திராட்சை, செர்ரி, தக்காளி, ஆரஞ்சு பழம்,  முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

Previous article10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும் ரூ 20000 ஆயிரத்தில் உடனடி வேலை!!! எல்ஐசி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!!
Next articleஇனி ரேஷன் கடைகளில் அரிசி கிடையாது!! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!