தேர்தலுக்கு பிறகு ஊரடங்கா! தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Photo of author

By Rupa

தேர்தலுக்கு பிறகு ஊரடங்கா! தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

கொரோனா தொற்றானது ஒராண்டு காலமாக நாடு நாடாக சுற்றி வளம் வருகிறது.இந்நிலையில் மக்கள் அனைவரும் கொரோனா தொற்றை மறந்து வாழ ஆரம்பித்ததால் கொரோனாவானது அதிக அளவு பரவ ஆரம்பத்துவிட்டது.தற்போது இந்தியா கொரோனா தொற்றின் பாதிப்பில் நான்காம் இடத்திலிருந்து மூன்றாம் இடத்திற்கு வந்துவிட்டது.இவ்வாறு கொரோனா அதிகரிக்கும் நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை நடக்க இருக்கிறது.இதனால் அரசியல் தலைவர்கள் கூட்டங்களை கூட்டி பரப்புரை நடத்தினர்.

அவர்கள் அதிக அளவு கூட்டத்தை கூட்டுவதினால் அதிக நபர்களுக்கு கொரோனாவானது பரவ ஆரம்பித்துவிட்டது.அதுமட்டுமின்றி பல அரசியல் தலைவர்களுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அந்தவகையில் குறிப்பிட வேண்டுமென்றால் திமுக மகளிரணி செயலாளர் மற்றும் ஸ்டாலின் தங்கையான கனிமொழிக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாளை வாக்குப்பதிவு தொடங்க இருப்பதால் கொரோனா தடுப்பு குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் கூறியதாவது,வாக்காளர் அனைவரும் வாக்குச்சாவடிக்குள் வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.அதுமட்டுமின்றி அனைத்து வாக்குசாவடிகளிலும் சுகாதாரத்துறை ஊழியர்கள் இணைந்து செயல்படுவது இதுவே முதன் முறையாகும்.அதனோடு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சானிடைசர்,முகக்கவசம் உள்ளிட்ட 13 கிட் வழங்கப்படுகிறது.

கொரோனா தொற்று உறுதியானவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு உடையை அணிந்தது வந்து கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்களாம் என்று கூறினார்.தற்போது தமிழகத்தில் அதிக அளவு கொரோனா தொற்றானது பரவி வருகிறது.அதனால் பலர் இந்த தேர்தல் முடிந்ததும் ஊரடங்கு எனக் கூறி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கூறினார்.தேர்தல் முடிந்ததும் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் சுகாதாரத்துறை ஊழியர்கள் அனைவரும் வீடு வீடாக சென்று கொரோனா காய்ச்சல் அறிகுறி உள்ளதா என பரிசோதனை செய்வர் என்று தெரிவித்தார்.தற்சமயம் 54 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்துகள் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது.அந்தவகையில் தற்போது வரை 32 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.தேர்தலுக்கு பிறகு ஊரடங்கு  எனக் கூறும் வதந்திகளை நம்ப வேண்டாம்.தேர்தலுக்கு பிறகு கொரோனா தடுப்பூசி போட விழிப்புணர்வு செய்யப்படும் என்றார்.