அலையடித்து ஓய்ந்தது போல தமிழகம் முழுதும் பரப்புரை நிறைவேறியது!! வாக்குப்பதிவுக்கு தயாராகும் பொதுமக்கள்!!  

0
86
The whole campaign was completed in Tamil Nadu as if it had wavered and rested !! The public getting ready to vote !!
The whole campaign was completed in Tamil Nadu as if it had wavered and rested !! The public getting ready to vote !!

அலையடித்து ஓய்ந்தது போல தமிழகம் முழுதும் பரப்புரை நிறைவேறியது!! வாக்குப்பதிவுக்கு தயாராகும் பொதுமக்கள்!!

நாளை நடக்க இருக்கும் சட்ட மன்ற தேர்தலுக்காக 234 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்கு பதிவு நடக்க உள்ளது இதற்காக  கடந்த 4 மாதங்களாக நடந்து வந்த பரப்புரை நேற்று முடிவுக்கு வந்தது. நாளை நடக்க இருக்கும் சட்ட மன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களும் அவரவர் தொகுதிகளில் பரப்புரையாற்றி வந்தனர். அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களும் தங்களது கட்சிக்காக பொதுமக்களிடையே பல நூதனமுறையில் வாக்குகளை சேகரித்து வந்தனர்.

சில கட்சிகள் தலைவர்கள் அவரவர் தொகுதிக்காக செய்த நலத்திட்டங்களை பட்டியலிட்டும், இதில் சில கட்சி தலைவர்கள் தங்கள் கட்சிக்கு ஆதரவாக, பிற கட்சிகளின் குறைகளை சுட்டி காட்டி  அந்த கட்சிகளின் மூக்கை உடைக்கும் சம்பவங்கள் நாள்தோறும் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று முதல் அனைத்து பரப்புரைகளும் முடிவுக்கு வந்தது.

இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது தேர்தல் பரப்புரை ஆரம்பித்த நாள் 29.12.2020 மற்றும் 04.04.2021 அன்று பரப்புரை நிறைவு செய்தார் 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பரபுரையாற்றினார், மேலும் ஸ்டாலின் தனது தேர்தல் பரப்புரை ஆரம்பித்த நாள் 01.11.2020 மற்றும் 04.04.2021 அன்று பரப்புரை நிறைவு செய்தார் 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பரபுரையாற்றினார், சீமான் அவர்கள் தனது தேர்தல் பரப்புரை ஆரம்பித்த நாள் 07.03.2021 மற்றும் 04.04.2021 அன்று பரப்புரை நிறைவு செய்தார் 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பரபுரையாற்றினார் மற்றும் டி டி வி தினகரன் தனது தேர்தல் பரப்புரை ஆரம்பித்த நாள்  16.03.2021  மற்றும் 04.04.2021 அன்று பரப்புரை நிறைவு செய்தார் 150 க்கும்  மேற்பட்ட தொகுதிகளில் பரபுரையாற்றினார். நாளை ஒரே கட்டமாக காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகம் முழுக்க மத்திய பாதுகாப்பு படை போலீசார்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.

author avatar
CineDesk