மீண்டும் ஊரடங்கு? கட்டுப்பாடுகளை விதித்த தமிழக அரசு!

0
132
No full curfew required! Important information released by the Minister!
No full curfew required! Important information released by the Minister!

மீண்டும் ஊரடங்கு? கட்டுப்பாடுகளை விதிக்கும்  தமிழக அரசு!

கொரோனா தொற்றானது மக்களை பெருமளவு பாதிப்பை சந்தித்து வருகின்றனர். டெல்டா ,டெல்டா ப்லெஸ் ஆக இருந்த கொரோனா  தற்பொழுது ஒமைக்ரானாக உறு மாற்றமடைந்துள்ளது. மக்கள் தங்கள் அன்றாட வாழ்வை வாழ முடியாமல் பெருமளவு சிரமப்பட்டு வருகின்றனர். கிறிஸ்துமஸ் ,புத்தாண்டு போன்ற பண்டிகைகளை அடுத்து பொங்கல் பண்டிகை வர உள்ளது. இது தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும் தமிழர்க்கே உரிய பண்டிகை.

அச்சமயத்தில் பொது இடங்களில் மக்கள் அதிக அளவு கூட்டம் கூடுவர. அதனைத் தவிர்க்கவும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தவும்  தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்த ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் வெள்ளி ,சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் ஆலயங்களில் வழிபட தடை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் எடுக்கப்படும் என்பது பற்றியும் பேச்சுவார்த்தை நடப்பதாக தெரிவித்துள்ளனர்.

கல்லூரிகளில் சுழற்சிமுறை மேற்கொள்ளப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இரவு ஊரடங்கு போட அதிக அளவு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர். அதேபோல தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என பேசப்பட்டு வருவதாக கூறுகின்றனர். அதனால் தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கட்டுப்பாடுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.தொற்று பாதிப்பானது இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் தலைதூக்கி சய்து அதிகரித்தே வருகிறது.அதனை கட்டுப்படுத்த பல மாநிலங்கள் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் தற்பொழுது டெல்லி அரசு வார இறுதி நாட்களில் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.மேலும் பஞ்சாப் அரசும் இரவு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.அதனால் நமது தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous article50 விழுக்காட்டினருக்கு மட்டுமே அனுமதி – மத்திய அரசு
Next articleநண்பரை எலும்பாக மாற்றிய ஜடேஜா! சமூக வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்!