‘பிங்க் பஸ்’ஸின் தற்போதைய நிலை?

0
239
#image_title

‘பிங்க் பஸ்’ஸின் தற்போதைய நிலை?

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்று முதலில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் இலவச மகளிர் பேருந்து.

மகளிருக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம் செய்வதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியி தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்யலாம் என்று அந்த ஆணையில் கூறப்பட்டிருந்தது.

இரவோடு இரவாக பேருந்துகளில் ‘மகளிர் பயணம் செய்ய கட்டணமில்லை’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு மிகவேகமாக பயன்பாட்டுக்கு வந்தது இந்தத் திட்டம்.

மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை மூலம் தினசரி 49 லட்சம் பெண்கள் பயணம் செய்வதாகவும், அதற்காக பட்ஜெட்டில் ரூ. 2,800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அவ்வாறு கொண்டுவரப்பட்ட இந்த திட்டம் முறையான பராமரிப்புகள் ஏதுமின்றி பேருந்து முன்பக்கத்தில் மட்டும் ‘பிங்க் நிற’ பெயிண்ட் பூசப்பட்டு மகளிர் பயன்பாட்டில் உள்ளது, இந்த பேருந்துகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

பல்வேறு இடங்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்வதால் பேருந்து நடத்துனர்கள் அவர்களை தர குறைவாக நடத்துவதோடு, முறையான பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் செல்வதால் பெண்கள் பேருந்திற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

இவ்வாறான பல குறைகளை தீர்த்து மகளிர்க்காக முறையாக பராமரிக்கப்பட்ட பேருந்துகளை இயக்கி பெண்களின் பயணத்தை பாதுகாப்பானதாகவும் சிரமம் இன்றியும் செல்ல வழிவகை செய்யுமாறு தமிழக அரசிடம் மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

Previous articleமேயராகும் தூய்மை பணியாளர்!
Next articleஇன்று தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட்!