குலதெய்வ சாபம் நீங்க என்ன செய்ய வேண்டும்..?

0
384
#image_title

குலதெய்வ சாபம் நீங்க என்ன செய்ய வேண்டும்..?

குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவித துக்கம் சூழுந்து கொள்ளும். ஒருவரது வம்சாவளியில் வரும் தாத்தா, பாட்டி, தாய், தந்தையர் போன்றவர்கள் குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய வருடாந்திர பூஜையை முறையாக செய்ய தவறினாலோ, குல தெய்வத்தை அடியோடு மறந்து வேறு இஷ்ட தெய்வங்களை மட்டுமே வணங்க தொடங்கி குலதெய்வ கோயிலுக்கு செல்வதை முற்றிலும் தவிர்த்து விட்டாலோ குலதெய்வத்தின் சாபம் நிச்சயம் ஏற்படும்.

அதேபோல் குலதெய்வத்தை நினைத்து கோபப்படுவது, பசுவை கொடுமை செய்வது, கரு கலைப்பு செய்வது, பெற்றோரை கவனிக்காமல் அவமதிப்பது. இது போன்ற செயல்களாலும் குலதெய்வ சாபம் கிடைக்கும்.

குலதெய்வ சாபத்தில் இருந்து நீங்க வழி:-

குலதெய்வ சாபத்தை அவரே நினைத்தால் மட்டுமே நீக்க முடியும். அதனால் அவருக்குப் பிடித்தது போல நாம் குலதெய்வத்திற்கு படையல் போட்டு தவற்றை உணர்ந்து கண்ணீர் விட்டு மன்றாடி வணங்கினால் மட்டுமே சாப விமோச்சனம் கிடைக்கும்.

குலதெய்வ சாபம் நீங்க மந்திரம்:-

ஓம் என் குலதெய்வம் வர வர

ஓம் வம் வம் உம் உம்

என் படி ஏறி வா வா

என் குல தெய்வவமே…

இந்த மந்திரத்தை தினமும் 18 முறை உங்கள் வீட்டு பூஜை அறையில் சொல்லிவர உங்களுக்கு உங்கள் குலதெய்வத்தின் சாபம் நீங்கி அருள் கிடைக்கும்.

Previous articleஇது தெரியுமா? சூடு நீரில் இஞ்சி சேர்த்து பருகினால் என்ன நடக்கும்..!!
Next articleநெஞ்சு வலி? இதை அங்கு தடவினால் வலி காணாமல் போகும்..!! 100% இயற்கை மருத்துவம்!