இனி பெட்ரோலே வேண்டாம்., விலை ஏற்றத்தால் குதிரை வண்டி, சைக்கிளுக்கு மாறிய வாகன ஓட்டிகள்!!

Photo of author

By Jayachithra

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விற்கிறது. இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் பைக்குகளில் பந்தாவாக வலம் வந்தவர்கள் இப்போது மணிவாசகத்திடம் சரணடைந்து இருக்கின்றனர். கொத்தமங்கலத்தை சேர்ந்த சைக்கிள் பழுது பார்க்கும் மணிவாசகம் கடைக்கு தான் தற்போது அனைத்து வாகன ஓட்டிகளும் செல்கின்றனர்.

ஏனெனில், கொத்தமங்கலத்தில் பெட்ரோல் விலை மிகவும் வேகமாக அதிகமாகி கொண்டிருப்பதால் கையில் பணம் இல்லாமல் வேறு வழி இன்றி சைக்கிளுக்கு மாற முடிவு செய்துவிட்டனர்.பல வருடங்களுக்கு முன்பு வீட்டில் பயன்படுத்திய சைக்கிள்களை பழைய இரும்புக்கு போடலாமா? என்று யோசித்து மூலையில் போட்டு வைத்திருந்த அனைவரும் தற்போது தூசி தட்டி எடுத்து மணிவாசகம் கொடுக்கிறார்கள்.

பெட்டிக்கடை நடத்தி கொண்டிருந்த இந்த முன்னாள் மெக்கானிக் தற்போது ஆல் இன் ஆல் அழகுராஜாவாக கொத்தமங்கலத்தில் மிகவும் பிசியாக இருக்கிறார். அக்கம் பக்கம் செல்ல பைக்கை எடுத்த நிலை மாறி, தற்போது தூரமான இடங்களுக்கு சென்றாலும் அனைவரும் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்துவிட்டனர்.

அறந்தாங்கியில் குதிரை வண்டி பந்தயம் பிரபலமாக இருக்கும். தற்போது பெட்ரோல் விலையின் காரணமாக நான்கு பேர் பந்தாவாக அறந்தாங்கியில் குதிரையில் பயணித்துள்ளனர். இதற்கு காரணமும் நம் பெட்ரோல் விலை தான். இனி வீட்டில் சும்மா இருந்தா செலவுக்கு கட்டுபடியாகாது என்று எண்ணி அனைவரும் குதிரை வண்டியில் ஏறி செல்ல ஆரம்பித்துவிட்டனர்.

என்னதான் அறிஞர்கள் பலவற்றை கண்டுபிடித்தாலும், தற்போது குதிரை வண்டி தான் மக்களை காப்பாற்றி வருகிறது. இதுவும் இல்லை என்றால் அனைவரும் பெட்ரோலுக்காக ஏங்கி தவிக்க வேண்டிய நிலைதான் ஏற்படும் .கட்டுக்கடங்காத பெட்ரோல் மற்றும் டீசலின் விலையால் இவர்கள் கண்ணீர் விடுவதை யாராலும் மறக்க முடியாது.