புற்றுநோய் மருந்துகளின் மீதான சுங்கவரி முழுவதுமாக நீக்கப்பட்டது!! மத்திய அரசு அறிவிப்பு!!

0
55
Customs duty on cancer drugs completely removed!! Central Government Announcement!!
Customs duty on cancer drugs completely removed!! Central Government Announcement!!

ஜிஎஸ்டி கவுன்சில், இந்தியா முழுவதும் உள்ள புற்றுநோயாளிகளுக்கு நிதி நிவாரணம் வழங்கும், செப்டம்பர் 13, 2024 முதல், அத்தியாவசிய புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டியை 12% முதல் 5% வரை குறைத்ததை தொடர்ந்து தற்பொழுது புற்றுநோய் மருந்துகளுக்கான சுங்கவரி முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

டிராஸ்டுஜுமாப் டெரக்ஸ்டெக்கான், ஒசிமெர்டினிப், துர்வாலுமாப் ஆகிய மூன்று புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கான சுங்கவரி தான் தற்பொழுது முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய அரசு செய்தி தொகுப்பில் தெரிவித்திருப்பதாவது :-

நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறை டிராஸ்டுஜுமாப் டெரக்ஸ்டெக்கான், ஒசிமெர்டினிப், துர்வாலுமாப் ஆகிய மூன்று புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கான சுங்க வரியை முற்றிலுமாக நீக்கியுள்ளது. மேலும், 08.10.2024 தேதியிட்ட அறிவிக்கை எண் 05/2024 மூலம் இந்த புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரிவிகிதங்கள் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது.

தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) ஒரு அலுவலக குறிப்பாணையை வெளியிட்டுள்ளது, அதில் ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்பட்டதாலும், சுங்க வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதாலும், குறைக்கப்பட்ட வரிகள், தீர்வைகளின் பலன்களை நுகர்வோருக்கு வழங்கவும், விலை மாற்றம் குறித்த தகவல்களை அளிக்கும் படிவம் II/V-ஐ தாக்கல் செய்யும்படி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்களையும் மத்திய அரசு வழங்கியிருக்கிறது.

Previous articleஇந்த ஆட்டம் போதுமா கொழந்த..ஆட்டம் காட்டிய ஸ்டார்க்!! தலை குனிந்து சென்ற ஜெய்ஸ்வால்!!
Next article   நான் அப்படி சொல்லவே இல்லை..கவாஸ்கர் மீது எழுந்த சர்ச்சை!! உண்மையில் அவர் கூறியது என்ன?