சீனாவின் 20 பொருட்கள் மீதான சுங்கவரியை அதிகரித்தது மத்திய அரசு !

Photo of author

By Parthipan K

கடந்த மே மாதம் இந்திய-சீன எல்லைப் பகுதியான லடாக்கில் இந்திய ராணுவத்திற்கும்,சீன ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிறைந்த சூழல் நிலவி வந்தது.இந்நிலையில் ஜூன் 15 ஆம் தேதி நடைப்பெற்ற மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் சீன ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வானது இந்தியா – சீனா இடையே போர் உருவாகும் சூழலை ஏற்படுத்தியது.இதன் எதிரொலியாக சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் சமூகவலைதளங்களில் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும்,தடை செய்ய வேண்டும் என்று கூறிவந்தனர்

இதனையடுத்து கடந்த ஜுன் 29 ஆம் தேதி தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 59-வது பிரிவின் கீழ்
இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் இருக்கும் சீனாவின் டிக்டாக், ஹலோ, யுசி பிரவுசர், கேம்ஸ்கேனர், வீ-சேட் உள்ளிட்ட 59 செல்போன் செயலிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்தது.

தற்போது மத்திய அரசு சீன பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் முயற்சியாக சீனாவின் 20 பொருட்கள்
மீதான சுங்கவரியை அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதில்
லேப்டாப், கேமரா,அலுமினியம் துணி வகைகள் போன்ற பொருட்கள் இடம் பெறும் என கூறப்படுகிறது மத்திய அமைச்சகத்தின் ஒப்பதல் கிடைத்ததும் இது நடைமுறைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.