சைபர் தாக்குதல் எச்சரிக்கை!! பயண விவரம் இனி தேவையில்லை!!
தற்போது உள்ள காலகட்டத்தில் உலகமெங்கும் சைபர் குற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மக்கள் அனைவரும் அவர்களின் விவரங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றார்கள். மேலும் சைபர் தாக்குதல், மக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிடும் தகவல் காரணமாகவே நடைபெறுகிறது.
இதனால் ஆன்லைனில் நடைபெறும் சைபர் குற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மட்டுமின்றி பெண்களின் மீதும் சைபர் குற்றமும் அதிகம் நடத்துக்கொண்டே வருகிறது. இணையத்தில் ஒவ்வொறு நாளும் சைபர் குற்றம் பற்றிய தகவல் வெளியாகிக் கொண்டே இருக்கிறது.
மேலும் இதனை தடுக்க, அரசாங்கம் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், இணைய பாதுகாப்பு விழிப்புணர்வில் உங்கள் தகவலை சைபர் குற்றத்திற்கு பயன்படுத்தலாம். இதனால் மக்கள் பயண விவரங்களை எதைவும் சமூக ஊடகங்களில் பதிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் ஆன்லைன் பண மோசடியால் பாதிக்கப்பட்ட அனைவரும் 1930 என்ற எண் அல்லது http://cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம் என்று தகவலை அரசு வெளியிட்டுள்ளது. இந்த செய்தி தற்போது அரசு அதிகாரபூர்வ இணையப்பக்கத்தில் வெளிவந்துள்ளது.