40000 மேற்பட்ட சீனவின் மறைமுகத் தாக்குதல்? மகாராஷ்டிரா சைபர் கிரைம் எச்சரிக்கை!!

Photo of author

By Pavithra

நம் நாடு மட்டுமின்றி பல நாடுகளும் சீனர்களால் கட்டமைக்கப்பட்ட அப்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.அவ்வப்பொழுது இந்த அப்களின் மூலம் நமது டேட்டாக்கள் திருடப்படுவதாக ப்ளே ஸ்டோரில் இருந்து சில அப்கள் நீக்கப்பட்டன.

கடந்த சில நாட்களாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் லடாக் பகுதியில் எல்லைப் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில் சில சீன ஆப்களை பயன்படுத்துவதால் நமது டேட்டாக்கள் திருடபட வாய்ப்புள்ளதாக சில நாட்களுக்கு முன்னர் 52 ஆப்புகள் ஆபத்தானவை என்று சைபர் கிரைம் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

அவர்கள் எச்சரித்தவாரே சீனாவை தளமாகக் கொண்ட ஹேக்கர்கள் கடந்த ஐந்து நாட்களில் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் வங்கித் துறை மீது 40,000’க்கும் மேற்பட்ட இணைய தாக்குதல்களை நடத்த முயற்சித்ததாக மகாராஷ்டிராவில் ஒரு உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

மகாராஷ்டிரா சைபர் தடுப்பு பிரிவு இந்த தாக்குதல்களை கண்காணித்து தகவல்களைத் தொகுத்துள்ளது. அவற்றில் கூறியுள்ளவாறு, பெரும்பாலான தாக்குதல்கள் சீனாவின் செங்டு பகுதியில் தோன்றியவை என்றும்,“எங்கள் தகவல்களின்படி, இந்திய சைபர்ஸ்பேஸில் உள்ள வளங்கள் மீது கடந்த நான்கு-ஐந்து நாட்களில் குறைந்தபட்சம் 40,300 இணைய தாக்குதல்கள் முயற்சிக்கப்பட்டன.” என்றும் அவர் கூறியுள்ளனர்.

இந்த ஹேக்கிங் தாக்குதலிலிருந்து இணைய பயனர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அம்மாநில காவல்துறையின் இணைய பிரிவான மகாராஷ்டிரா சைபர் அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.