தொடர்ந்து அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்!! விழிப்புணர்வு முயற்சி எடுத்துள்ள நீலகிரி மாவட்டம்!!

Photo of author

By Gayathri

தொடர்ந்து அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்!! விழிப்புணர்வு முயற்சி எடுத்துள்ள நீலகிரி மாவட்டம்!!

Gayathri

Cyber ​​crimes are increasing continuously!! The Nilgiri district has taken awareness!!

நவீன காலங்களில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்ற முன்னெடுப்பில் மத்திய உள்துறை அமைச்சகம் சைபர் கிரைம் அமைப்பினருக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்திய நாட்டை 8 மண்டலங்களாக பிடித்துள்ளனர். மேலும், சைபர் கிளிப் தொடங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தென் மாநிலங்கள் எல்லாம் தென் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

தற்சமயம் தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி போன்ற சைபர் கிரைம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சைபர் பள்ளிக்கூடம் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் சைபர் கிளப் தொடங்கப்பட்டு, அவ்வப்போது நடைபெறும் சைபர் குற்றங்களை குறித்து விளக்கி வருகிறது இந்தக் கிளப். வாரந்தோறும் சனிக்கிழமை மாலை ஒரு மணி நேரம் ஒதுக்கி வல்லுநர்களை வைத்து சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வை மாணவர்களுக்கு அளிக்கின்றது. விழிப்புணர்வு இல்லாததால் தான் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன எனவும் சைபர் க்ரைம் அமைப்பு தெரிவித்துள்ளது. இது போன்று அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை செயல்படுத்த வேண்டும் என்று மக்கள் பெரிதும் இதனை வரவேற்று வருகின்றனர்