ஒவ்வொரு மாதமும் கச்சா எண்ணெய்யினுடைய விலை நிலவரத்தை பொறுத்து தமிழகத்தில் பெட்ரோல் டீசல் மற்றும் சிலிண்டர் விலையானது ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த நிலையில், கடந்த மாதத்தை தொடர்ந்து இந்த மாதமும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்திருக்கிறது.
சர்வதேச சந்தையின் விலை நிலவரத்திற்கு ஏற்ப எரிவாயு சிலிண்டரின் விலை ஆனது ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில் கடந்த அக்டோபர் நவம்பர் டிசம்பர் மாதங்களில் தொடர்ந்து வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை ஆனது தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் விலை குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் வணிக சிலிண்டரின் விலை ஆனது மீண்டும் உயரத்தை தொட்டது.
ஏப்ரல் மாதம் வணிக ரீதியான சிலிண்டரின் விலை 43.50 ரூபாய் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் மே 1 ஆம் தேதியான இன்று மீண்டும் வணிக ரீதியான சிலிண்டரின் விலை 15.50 ரூபாய் குறைக்கப்பட்டு 1906 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த விலை குறைப்பானது இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக ரீதியான சிலிண்டரின் விலை குறைக்கப்பட்ட போதிலும் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படக்கூடிய எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.