சென்னையில் கன மழை காரணமாக வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய சிலிண்டர்களின் விலையானது உயர்ந்துள்ளது. இதனால் உணவாகங்களில் உணவுகளின் விலைகளில் மாற்றம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பு :-
வணிக பயண்பாட்டிகான 19 கிலோ எடைகொண்ட சிலிண்டர் விலை 16 ரூபாய் அதிகரித்து, ஆயிரத்து 980 ரூபாய் 50 காசுகளாக உயர்ந்துள்ளது. முன்னதாக சென்னையில் கடந்த மாதம் வணிக சிலிண்டரின் விலை, ஆயிரத்து 964 ரூபாய் 50 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலை மாதம் முதலே வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் உடைய விலை ஏற்றம் கண்டு வருகிறது. இதனால் வணிகர்கள் பெருமளவு பாதிப்பை சந்திக்க நேரிடும் என்றும் தகவல்கள் வெளியாக்கியுள்ளனர்.
பேரிடர் காலங்களில் இந்த மாதிரியான விலைவாசி உயர்வு என்பது வணிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களுக்கும் துன்பத்தை விளைவிப்பதாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எனினும், வணிக ரீதியான சிலிண்டர்களுக்கு மட்டுமே விலை உயர்த்தப்பட்ட நிலையில், வீட்டில் பயன்படுத்தக்கூடிய 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களின் விலையானது உயர்த்தப்பட வில்லை என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இதன் காரணமாக வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.818.50 ஆக தொடர்கிறது. இது தாய்மார்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.